மாஸ் காட்டும் மாஸ்டர்! 200 கோடி வசூல் செய்து புதிய சாதனை!

22 January 2021 சினிமா
master200cr.jpg

விஜயின் மாஸ்டர் திரைப்படம், 200 கோடி ரூபாயினை வசூல் செய்து புதிய சாதனையினை படைத்துள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்பர் வரை திறக்கப்படாமல் இருந்த திரையறங்குகளில், தற்பொழுது கூட்டம் நிரம்பி வழிகின்றது. இதற்கு முக்கியக் காரணமாக மாறியிருப்பது நடிகர் விஜய். நடிகர் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சேவியர் பிரிட்டோ தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் மாஸ்டர். கொரோனா ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ள நிலையில், 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே, திரையறங்கில் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

இதனால், தமிழகத்தில் உள்ள 90% திரையறங்குகளில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது. இந்தப் படம் வெளியான நாள் முதல் தற்பொழுது வரையிலும், நல்லதொரு வசூலினை எட்டி வருகின்றது. உலகளவில் எவ்விதப் படமும் வெளியாகாத காரணத்தால், மாஸ்டர் திரைப்படம் வசூலில் நல்லதொரு சாதனையினை புரிந்து வருகின்றது. படம் வெளியாகி எட்டே நாளில் 200 கோடியினை உலகளவில் வசூலித்து உள்ளது. இதனால், விஜயின் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.

அத்துடன் இத்திரைப்படமானது பிப்ரவரி 12ம் தேதி அன்று, நெட்பிளிக்ஸில் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

HOT NEWS