பதக்கத்தை உறுதி செய்த மேரி கோம்! அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல்!

12 October 2019 விளையாட்டு
marykom1.jpg

ரஷ்யாவில் தற்பொழுது, 11வது உலகப் பெண்கள் குத்துத் சண்டைப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் உலகிலுள்ள, பல நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகள் பங்குபெற்று உள்ளன. இந்தப் போட்டியில், மேரி கோம் உட்பட நான்கு இந்திய வீராங்கனைகள், அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தினை உறுதி செய்துள்ளனர்.

51 கிலோ எடைப் பிரிவில், முதன்முறையாக களமிறங்கும் மேரி கோம், கொலம்பியாவின் வாலன்சியா விக்டோரியாவுடன் மோதினார். இதில், 5-0 என்ற கணக்கில், வாலன்சியாவினை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

அதே போல், 48 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, தென் கொரியாவின் கிம் ஹியாங் மியை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறி அசத்தனார். உலக அளவில், கிம் ஹியாங் மி தான் நம்பர் ஒன் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், 54 கிலோ எடை பிரிவில் இந்திய வீராங்கனையான ஜமூனா போரோ, ஜெர்மனியின் உர்சுலா கோட்லோப்பை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி, அரையிறுத்திக்கு முன்னேறினார்.

இதே போல், 69 கிலோ எடை பிரிவில், இந்திய வீராங்கனையான லவ்லினா போர்கோஹெய்ன், போலாந்து நாட்டின் கரோலினா கோஸ்ஜிஸ்காவை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தி எளிதாக வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

தற்பொழுது, நான்கு வீராங்கனைகள், அரையிறுதிக்கு முன்னேறி உள்ளதால், நான்கு பதக்கங்கள் இந்தியாவிற்கு உறுதியாகி உள்ளன.

HOT NEWS