காலிறுதிக்குத் தகுதி பெற்ற மேரி கோம்! குத்துச் சண்டையில் இந்திய வீராங்கனைகள் முன்னிலை!

09 October 2019 விளையாட்டு
marrykom.jpg

ரஷ்யாவில் நடைபெற்று வரும், உலகக் குத்துச் சண்டைப் போட்டியில், இந்திய வீராங்கனை மஞ்சு ராணி, ஏற்கனவே காலிறுதிப் போட்டிக்குத் தகுதிப் பெற்றிருந்தார். இந்நிலையில், உலகப் புகழ் பெற்ற மேரி கோம், காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று அசத்தியுள்ளார்.

உலக அளவில், ஆறு முறை சாம்பியன் பட்டம் பெற்ற மேரி கோம், 48 கிலோ எடைப் பிரிவில் தாய்லாந்தின் ஜூதாமஸ் ஜித்போங் என்ற வீராங்கனையை எதிர் கொண்டார். ஆட்டத்தின் ஆரம்பம் முதலே, ஆதிக்கம் செலுத்திய மேரி கோம் 5-0 என்ற கணக்கில், எதிரி வீராங்கணையை வீழ்த்தி எளிதாக வெற்றிப் பெற்றார். இதன் மூலம், அவர் தற்பொழுது காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார்.

ஆனால், 75 கிலோ எடைப் பிரிவில், முன்னாள் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கணை சுவாதி பூரா, துரதிர்ஷ்டவசமாகத் தோல்வி அடைந்தார்.

HOT NEWS

S