மன்னிப்பு கேட்ட மனோபாலா! வடிவேலு என்ன மன்னிச்சிரு!

03 June 2020 சினிமா
manobalasorry.jpg

வடிவேலுவின் புகாருக்குத் தற்பொழுது, நடிகர் மனோபாலா மன்னிப்புக் கேட்டுள்ளார்.

மனோபாலா யூடிப்பில் வேஸ்ட் பேப்பர் என்ற ஒரு சேனலை வைத்துள்ளார். அதில், அவர் பல்வேறு நடிகர்களுடன் அவர்களுடைய அனுபவங்களைப் பற்றிப் பேசி வருகின்றார். இந்த சூழ்நிலையில், சில தினங்களுக்கு முன்பு, நடிகர் சிங்கமுத்துவிடம் பேட்டி எடுத்தார். அதில், வடிவேலு பற்றி சிங்கமுத்து பேசினார்.

இந்த விஷயம் வடிவேலுவிற்கு சென்று விட்டது. மேலும், பிரபல நடிகர்கள் இருக்கும் சைமா என்ற குழுவிலும் இந்த வீடியோ பகிரப்பட்டது. இதனால், வருத்தமடைந்து நடிகர் வடிவேலு நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார். என்னுடையப் பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தும் வகையில், இவ்வாறு சிங்கமுத்து பேசியுள்ளார். இதனால், சிங்கமுத்து மற்றும் மனோபாலா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுக் கூறியுள்ளார்.

மேலும், சிங்கமுத்து மற்றும் நான் சம்பந்தப்பட்ட வழக்கானது, நீதிமன்றத்தில் உள்ளது. இந்நிலையில், இவ்வாறு பேசியிருப்பது தவறு என்றும் கூறியிருந்தார். இதற்கு தற்பொழுது மனோபாலா மன்னிப்பு கேட்டார். அவர் பேசும் பொழுது, எனக்கும் வடிவேலுவிற்கும் 30 ஆண்டு கால நட்பு. அதனைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை. என் மீது, அவருக்கு ஏன் இவ்வளவு கோபம் எனத் தெரியவில்லை. எப்படி இருந்தாலும் சரி, வடிவேலு என்ன மன்னிச்சிரு என அவர் கூறியுள்ளார்.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS