வெள்ளி பதக்கம் வென்ற வீர மங்கை! மஞ்சு ராணி!

13 October 2019 விளையாட்டு
manjuranifinal.jpg

ரஷ்யாவில் நடைபெற்று வரும் மல்யுத்தப் போட்டியில், இந்திய வீராங்கனை மஞ்சு ராணி வெள்ளிப் பதக்கம் வென்றார்.

ரஷ்யாவின், உலன் உடாவில், சர்வதேசே 11வது உலக மகளிர் குத்துச் சண்டைப் போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் இந்திய வீராங்கணைகள் நான்கு பேர், அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவர்களில் மஞ்சு ராணி என்ற வீராங்கனை, இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவர், 48 கிலோ எடைப் பிரிவில் ரஷ்யாவின் ஈக்காட்டரினா பால்ட்சீவா எதிராக விளையாடினார்.

கடுமையாகப் போராடியும், ரஷ்யாவின் வீராங்கனையை மஞ்சுவால் வீழ்த்த முடியவில்லை. கடைசியில் 4-1 என்ற கணக்கில், தோல்வி அடைந்தார். இதனால், தங்கப்பதக்கம் வெல்லும் வாய்ப்புத் தகர்ந்தது. வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.

அதே போல், வெவ்வேறு எடைப் பிரிவுகளில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற மேரி கோம், ஜமூனா போரோ மற்றும் லோவ்லினா போர்கோஹெயன் ஆகியோர் அரையிறுதியில் தோல்வியடைந்தனர். இதனால், அவர்கள் வெண்கலப் பதக்கத்துடன் வெளியேறினர்.

HOT NEWS