உலக மல்யுத்த காலிறுதியில் மஞ்சு ராணி!

08 October 2019 விளையாட்டு
manjurani.jpg

உலக மல்யுத்தப் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு, மஞ்சு ராணி தகுதி பெற்றுள்ளார்.

தன்னுடைய முதல் சர்வேதசப் போட்டியில், மேரி கோம்மினைப் போல இவரும் களமிறங்கினார். 48 கிலோ எடையுள்ள ராணி, தன்னுடையப் போட்டியில், வெனிசுலாவின் ரோஜஸ் டையோனிஸ் சிடினோவினை எதிர்த்துப் போட்டியிட்டார்.

ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய ராணி, இப்போட்டியினை 5-0 என்ற நேர் பாய்ண்ட்டுகளில் வீழ்த்தி வெற்றி பெற்றார். மேலும், அவர் அந்தப் போட்டியில் வென்றதன் மூலம், காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

அவர் தற்பொழுது, லைட் ப்ளைவெயிட் பிரிவில், உலகளவில் வெண்கலப் பதக்கம் வென்ற தென் கொரிய வீராங்கணையான கிம் ஹியாம் மீ உடன், மோத உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், மேரி (மேரி கோம்) அக்கா, நம் நாட்டிற்காக பல பதக்கங்களை வென்றுள்ளார். அவர், விளையாடிய மேடையில் விளையாடும் பொழுது எனக்கு எவ்வித மன இறுக்கமும் இல்லை. நானும், அவரைப் போல, பல பதக்கங்களை நம் நாட்டிற்காக, வென்று தருவேன் என்று கூறியுள்ளார்.

ராணி மற்றும் கிம் ஹியாம் மீ மோதும் காலிறுதிப் போட்டியும், தற்பொழுது போட்டி நடைபெறும், ரஷ்யாவின் உலன் உதீயில் நடைபெள உள்ளது.

HOT NEWS

S