இரண்டு சீசன்களுக்கு விளையாட தடை! கதறும் ரசிகர்கள்! கால்பந்து அணிக்கு அபராதம்!

15 February 2020 விளையாட்டு
manchestercity.jpg

உலகளவில் பிரசித்த பெற்ற, இங்கிலாந்து நாட்டின் பிரீமியர் லீக் அணிகளுள் ஒன்றான, மென்செஸ்டர் சிட்டி அணிக்கு தற்பொழுது அபராதம் விதிக்கப்பட உள்ளது.

பிரீமியர் லீக் கால்பந்து விளையாட்டானது, உலகளவில் பிரசித்தி பெற்றது. இதில், 20 அணிகள் விளையாடி வருகின்றது. இங்கிலாந்தினை தாயகமாக கொண்ட, இந்தப் போட்டித் தொடரானது நடைபெற்று வருகின்றது. இந்த அணியானது, யூஈபாவின் விதிகளை மீறி, அதிகளவில் ஸ்பான்சர்சிப் மூலம் பணம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.

பினான்சியல் பேர் ப்ளே (எப்எப்பி) விதிகளை அந்த அணி மீறியுள்ளதால், ஐரோப்பிய கால்பந்து போட்டியில் விளையாட, இரண்டு தொடர்களுக்கு தடை விதித்துள்ளது. மேலும் இந்த அணிக்கு, 25 மில்லியன் யூரோ அபராதமும் விதிக்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்த்து, விளையாட்டு நீதிமன்றமான சிஏஎஸ்சிற்கு செல்ல அந்த அணி திட்டமிட்டுள்ளது.

தண்டனை நிரூபிக்கப்பட்டால், கண்டிப்பாக அந்த அணி அடுத்த இரண்டு யூஈபா தொடர்களில் விளையாட தடை விதிக்கப்படும் என கூறப்படுகின்றது.

HOT NEWS