மும்பையில் ஐபிஎல் கிடையாது! விரைவில் அறிவிப்பு! டிக்கெட்கள் தடை!

12 March 2020 விளையாட்டு
ipl.jpg

வருகின்ற மார்ச் 29ம் தேதி அன்று, ஐபிஎல் போட்டியின் 13வது சீசனானது தொடங்க உள்ளது. இதனிடையே, மும்பை இந்தியன்ஸ் அணியின் மாநிலமாக விளங்கும், மஹாராஷ்டிராவில் ஐபிஎல் டிக்கெட்டுகளை விற்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்தியா மட்டுமின்றி உலகம் முழுக்க, கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், சர்வதேச அளவில் பெரிய அளவில் மக்கள் கூடும் நிகழ்ச்சிகள் அனைத்துமே, மறுத் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு வருகின்றது.

இதனிடையே, வருகின்ற மார்ச் 29ம் தேதி அன்று, இந்தியர்கள் அனைவராலும் விரும்பும் ஐபிஎல் போட்டியானது தொடங்க உள்ளது. முதல் போட்டியானது, மஹாராஷ்டிரா மாநிலத்தின், வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவாமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மஹாராஷ்டிராவில் ஐபிஎல் டிக்கெட்டுகள் விற்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், அங்கு முதல் போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில், நோய் தொற்று உள்ளவர் ஒரு முறை இருமினாலோ அல்லது தும்மினாலோ போதும். அது அனைவருக்கும் பரவிவிடும். இதனைக் கருத்தில் கொண்டு, இவ்வாறான முதற்கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன.

ஒருவேளை, திட்டமிட்டப்படி முதல் போட்டி நடைபெற்றாலும், மைதானத்திற்குள் ரசிகர்கள் பார்க்க அனுமதிக்கப்படமாட்டார்கள் எனத் தெரிகின்றது. இதனிடையே, வருகின்ற 14ம் தேதி அன்று, ஐபிஎல் 13வது சீசன் நடத்துவதுக் குறித்து, உயர்மட்ட ஆலோசனை நடைபெற உள்ளது.

HOT NEWS