சிங்கமா? நரியா? வேட்டைக்குத் தயாரான மாஃபியா! அருண் விஜய், பிரசன்னாவின் அடுத்த அவதாரம்!

17 September 2019 சினிமா
mafia.jpg

நேற்று பலத்த எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே, மாலையில், அருண் விஜய், பிரசன்னா நடிப்பில், கார்த்திக் நரேன் இயக்கத்தில், மாஃபியா சேப்டர் ஒன் படத்தின், டீசர் வெளியானது.

படத்தின் டீசர் வெளியானதில் இருந்து, தற்பொழுது வரை, நல்ல பார்வையாளர்களை பெற்று வருகிறது. இதுவரை, ரௌடி, போலீஸ் என மாறுபட்ட கதாப்பாத்திரங்களில், நடித்து வந்த அருண் விஜய் இந்தப் படத்தில், போலீஸ் அதிகாரியாக வருகின்றார். அஞ்சாதே படத்திற்குப் பின், நடிகர் பிரசன்னா ஒரு நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் இப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் டீசரைப் பார்க்கும் பொழுது, பிரசன்னா ஒரு மாஃபியா கூட்டதின் தலைவராக இருக்கலாம் என ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர். அருண் விஜய், போலீஸ் அதிகாரியாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன.

இந்த டீசரில், வரும் இடங்களும், ஒளிப்பதிவும் அற்புதமாகவே உள்ளது. துருவங்கள் பதினாறு படத்தினை இயக்கிய கார்த்திக் நரேன், இப்படத்தினை இயக்கி உள்ளார் என்பதால், கண்டிப்பாக, கதையும் தரமாகவே இருக்கும் என ரசிகர்களால் மட்டுமின்றி, சினிமாத் துறையினராலும் நம்பப்படுகிறது.

HOT NEWS