மாஃபியாவில் நடிகர் அருண்விஜய்! வைரலாகும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்!

02 July 2019 சினிமா
mafiafirstlook.jpg

லைகா நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாக உள்ள மாஃபியா படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில், அருண் விஜய் அட்டகாசமாகப் போஸ் கொடுத்துள்ளார்.

செக்கச்சிவந்த வானம், தடம் போன்ற வெற்றிப் படங்களைத் தொடர்ந்து, நடிகர் அருண் விஜய் மாஃபியா அதிகாரம் ஒன்று, என்ற படத்தில் இணைந்துள்ளார். இதில் கையில், ஒரு சீட்டு வைத்துள்ளார். அதில், கோட் வைப்பர் என்ற வசனம் உள்ளது.

படம் ஒரு இண்டர்நேஷனல் திரில்லர் படமாக உருவாக வாய்ப்புள்ளதாக, சினிமாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே சமயம், பாக்ஸர் என்ற திரைப்படத்திலும், அருண் விஜய் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS