பிக்பாஸ் மதுமிதா போலீசில் புகார்! என்னை எல்லாரும் கொடுமைப்படுத்தினாங்க!

05 September 2019 சினிமா
madhumitha.jpg

பிக்பாஸ் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக 70 நாளைக் கடந்து கொண்டிருக்கின்றது. பரபரப்புக்கு இந்த சீசனில் பஞ்சமில்லாத நிலையில், இதில் பங்குபெற்ற போட்டியாளர் மதுமிதா, தற்பொழுது காவல் நிலையம் சென்றுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகப் போட்டியாளர்கள், தம்மை கொடுமைப்படுத்தியதாக, தபால் மூலம் சென்னையில் உள்ள நசரத்பேட்டைக் காவல்நிலையத்தில், புகார் அளித்துள்ளார். மேலும், நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கமல்ஹாசனும், இதுபற்றிக் கண்டுகொள்ளவில்லை எனவும் கூறியுள்ளார்.

ஏற்கனவே, பிக்பாஸ் நிகழ்ச்சி சார்பில், கிண்டியில் உள்ள காவல்நிலையத்தில், நடிகை மதுமிதா மீது, புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அவர் தன்னுடையப் பாக்கித் தொகையைக் கேட்டு மிரட்டியதாக, புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், தற்பொழுது அவர் தன் பங்குக்கு புகார் அளித்துள்ளார்.

பிக்பாஸே முடிந்தாலும், இந்தம்மவோட அக்கப்போர் முடியாது போல!

HOT NEWS