பிக்பாஸ் ஒப்பந்தத்தால், என்னால் வெளியில் நடமாட முடியவில்லை! மதுமிதா குமுறல்!

06 September 2019 சினிமா
madhumitha.jpg

பிக்பாஸ் 3ம் பகுதி தற்பொழுது, தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இதில், 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், தேனடைப் புகழ் மதுமிதாவும் ஒருவர்.

காவிரி பற்றிப் பேசி, தமிழ்நாட்டிற்காக தற்கொலை முயற்சியும் செய்தவர். அதன் காரணமாக, கையை அறுத்துக் கொண்டதால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் விதிமுறைப்படி, அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். இது நம் அனைவருக்கும் ஏற்கனவே தெரிந்த விஷயம் தான்.

ஆனால், அதற்கு அப்புறம் நடந்த விஷயம் தான் மிகவும் சுவாரஸ்யமானது. பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் பெண் ஊழியரை, சம்பள பாக்கியைக் கேட்டு மிரட்டியதாக, மதுமிதா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று பிக்பாஸ் மதுமிதா சார்பில், தபால் மூலம், காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, தன்னை, சக வீட்டுப் போட்டியாளர்கள் துன்புறுத்தியதாக கூறியுள்ளார். இதனை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும், கமல்ஹாசனும் கேட்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுமட்டுமின்றி, இது குறித்துப் பேசிய அவருடைய வீட்டார், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் போகும் முன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுவிட்டுத் தான் சென்றார். அந்த ஒப்பந்தத்தின் படி, தற்பொழுது மதுமிதாவால் வெளியில் செல்ல இயலவில்லை. எவ்வித நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க இயலவில்லை. இதனால், கடும் மன உளைச்சலில் உள்ளார் எனக் குமுறுகின்றனர்.

என்னப் பண்ணி, என்ன ப்ரயோஜனம். ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் பொழுது, இதனைப் பற்றி யோசிக்காமல், நிர்வாகத்தைக் குறைக் கூறி என்ன பயன்?

HOT NEWS