கடலுக்கு அடியில் ஏலியனைப் பார்த்தேன்! நேஷனல் ஜியோ. சேனல் ஒளிப்பதிவாளர் பரபரப்பு வாக்குமூலம்!

12 July 2019 தொழில்நுட்பம்
uso.jpg

கடலுக்கு அடியில் புகைப்படம் எடுக்கும் பொழுது, ஏலியனைப் பார்த்ததாக நேஷனல் ஜியோகிராபிக் சேனல் வேலை செய்து வரும், புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறியுள்ளார்...

ஓசன் எக்ஸ் மற்றும் நேஷனல் ஜியோகிராபிக் சேனலில், ஒளிப்பதிவு பிரிவின் தலைமை இயக்குநரான லூயிஸ் லாமர், இது பற்றிக் கூறுகையில், நான் பார்த்த மனிதர்கள், மிகவும் வேகமாகக் கடலுக்கு அடியில் செயல்பட்டனர். அவர்கள் நம்மை விட, மேம்பட்ட தொழில்நுட்ப்பத்தினைப் பயன்படுத்தினர் என்றார்.

இவர், பல ஆழ்கடல் அதிசயங்களை புகைப்படம் எடுத்து உலகுக் காட்டியவர். கடலில் நீந்தும் பாம்பு, அதிய தவளைகள், ராட்சத திமிங்கலங்கள், சுறாக்கள் என தன்னால் முடிந்த பெரிய விஷயங்களை எல்லாம் அசாதாரணமாக செய்தவர். மேலும், இது பற்றி அவர் கூறுகையில், கடல் இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கி இருந்தாலும், அது மிக அழகானது என்று வர்ணிக்கிறார்.

ஏற்கனவே, அமெரிக்க நீர்மூழ்கி கப்பலில் சென்ற வீரர்கள் அசுர வேகத்தில், கடலுக்கடியில் சென்ற மற்றொரு கப்பலைக் கண்டுள்ளனர். இது மனிதர்களால், உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பிருக்காது எனவும், வானில் பறக்கும் யூஎப்ஓ-க்களைப் போல யூஎஸ்ஓ-க்களாக இருக்க வாய்ப்புகள் இருக்கலாம் என, தகவல் அளித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS