குட்டிக் கதையும் காப்பியா! என்னடா இது அனிருத்துக்கு வந்த சோதனை!

18 February 2020 சினிமா
kuttystoricopy.jpg

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் அனிருத். அஜித், ரஜினி மற்றும் விஜய் உள்ளிட்ட அனைத்துப் பெரிய நடிகர்களுக்கும், இசையமைத்துள்ளார். தற்பொழுது மாஸ்டர் படத்திற்கும், அவரே இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி என்றப் பாடலானது, இணையத்தில் வெளியாகி சக்கைப் போடு போட்டு வருகின்றது. தற்பொழுது வரை ஒன்றரை கோடிக்கும் அதிகமானோர் பார்த்து உள்ளனர். பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் அப்பாடலுக்கு, லைக் செய்துள்ளனர். இந்நிலையில், இப்பாடலானது, சந்தன மல்லிகையில் தூளி கட்டிப் போட்டேன் என்ற அம்மன் பாடலின் காப்பி என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

கடந்த 2000ம் ஆண்டு வெளிவந்த ராஜகாளியம்மன் படத்தில், இப்பாடல் இடம்பெற்று உள்ளது. இந்தப் படத்திற்கு எஸ்.ஏ.ராஜ்குமார் இசையமைத்து இருந்தார். தற்பொழுது 20 வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பாடலை அனிருத் காப்பியடித்து இருக்கின்றார் எனப் புகார்கள் எழுந்துள்ளன. இது குறித்து, சமூக வலைதளங்களில் ரசிகர்கள் தங்களுடையப் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே, தர்பார் படத்திலும் இந்தப் புகார் முன் வைக்கப்பட்டது. அதற்கு முன், கோலமாவு கோகிலா படத்தின் பாடல்களும் காப்பி என, யூடியூப் நிறுவனமே, கோலமாவு கோகிலா படத்தின் பாடல்கள் நீக்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS