இரண்டு ஹாட் ரிக் விக்கெட் எடுத்துள்ளது மகிழ்ச்சி அளிக்கின்றது!

19 December 2019 விளையாட்டு
kuldeepyadav11.jpg

சர்வதேச ஒரு நாள் போட்டிகளில், இரண்டு ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்துள்ளது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கின்றது என, இந்திய வீரர் குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

நேற்று, வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில், ஹாட் ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார் குல்தீப். இந்தியாவின் சார்பில் ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில், இரண்டு ஹாட் ரிக் விக்கெட் எடுத்துள்ள வீரர் என்றப் பெருமையையும் அவர் தற்பொழுதுப் பெற்றுள்ளார். அவர் பேசுகையில், கடந்த 10 மாதங்கள் எனக்கு மிகவும் சவாலானவை. நான் சிறப்பாக முயற்சி செய்தும் விக்கெட்டுகள் வராமல் இருந்தது. அப்பொழுது எனக்கு என் மீதே சந்தேகம் வந்தது. இதனால் என்னை உலகக்கோப்பை அணியில் இருந்து நீக்கினர்.

பின்னர், கடந்த நான்கு மாதங்களாக கடுமையானப் பயிற்சியில் ஈடுபட்டேன். நான்கு மாதங்களுக்குப் பிறகு, நேரடியாக டி20 போட்டியில் விளையாடினேன். அது எனக்குப் பதற்றத்தினைத் தந்தது என்றார். ஹாட் ரிக் பாலின் பொழுது, உங்கள் மனதில் என்ன இருந்தது என, நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த குல்தீப், சின்னாமேன் பந்தா அல்லது வேறு பந்துவீச்சினை மேற்கொள்வதா என யோசித்தேன். தற்பொழுது மகிழ்ச்சியாக உள்ளது எனக் கூறியுள்ளார்.

HOT NEWS