இந்த பழக்கங்கள் இருந்தால் நீங்கள் அறிவாளிதான்!

09 March 2020 உடல்நலம்
kolaigaran-review.jpg

நாம் அனைவருக்கும் அறிவாளியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழ்மனதில் உண்டு. ஒரு சிலர் பிறவியிலேயே நல்ல அறிவுடன் இருப்பர். ஆனால், பெரும்பாலானோர் பட்டறிவு மற்றும் பகுத்தறிவு மூலமே அறிவாளிகளாக மாறுகின்றனர். பொதுவாக, நீங்கள் அறிவாளிகளா எனத் தெரிந்து கொள்ள பின்வருவனவற்றைப் படியுங்கள். இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயத்தில் உங்களுடைய பழக்கங்களும் இருந்தால் நீங்கள் உண்மையிலேயே அறிவாளிதான்.

1. தனியாக அமர்ந்து வேடிக்கைப் பார்த்தல்

இது கொஞ்சம் பார்ப்பவருக்கு ஒரு மாதிரியாகத் தெரிந்தாலும், இந்தக் குணம் உடையவர்கள் உடலைக் காட்டிலும், மனதிற்கும், மூளைக்கும் அதிக வேலைக் கொடுப்பர். இதனால் தானாகவே யாருடைய உதவியுமின்றி, அறிவை வளர்த்துக் கொள்வர்.

2. நகைச்சுவை

இந்தக் குணத்தைக் கொண்டவர்கள் மிகவும் அறிவாளிகளாகவும், திறமையுடனும், சுறுசுறப்பாகவும் இருப்பர். இவர்கள் அறிவாளிகளாக இருப்பதாலேயே பிறரை ஏமாற்றி சிரிக்க வைத்துவிடுவர்.

3. இரவில் வேலை செய்தல்

ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் முற்றிலும் வராது. இதற்கு "இன்சோமேனியா" என்றுப் பொருள். இப்பழக்கத்தை உடையவர்கள் பெரும்பாலும் படைப்பாளிகளாகவும் விஞ்ஞானிகளாகவும் இருப்பர்.

4. குளிக்காமல் வேலை செய்தல்

உண்மையில் இவர்கள் சுத்தமாக இருக்க விரும்புவதில்லை. இவர்கள் குளிக்கும் நேரத்தில் வேலையைச் செய்தால் சீக்கிரம் முடித்துவிடலாம் என எண்ணுவர். அதுமட்டுமின்றி இரண்டு நாட்களுக்கும் மேலாக ஒரே உடையை அணிந்திருப்பர்.

5. சோம்பேறித்தனம்

இதற்கு முக்கியக் காரணம் அதீத அறிவே. சராசரி மனிதர் ஒரு நாள் முழுக்க யோசித்துச் செய்ததை இந்த சோம்பேறித்தனம் உடையவர்கள் கால் நாளுக்கும் குறைவான நேரத்தில் முடித்துவிடுவர். இதனால், அனைத்து வேலைகளையும் கடைசி நேரத்திலேயே செய்ய ஆரம்பிப்பர்.

6. அடிமையாதல்

இது சற்று மோசமான விஷயம் என்றாலும் இது உண்மையும் கூட. அதிமேதாவிகள் ஏதாவது ஒருப் பழக்கத்திற்கு கண்டிப்பாக அடிமையாக இருப்பர். அப்பழக்கத்தைக் கடைசி வரையிலும் பின் தொடர்வர். அது நல்ல அல்லது கெட்டப் பழக்கம் எனப் பிரித்துக் கூடப் பார்க்கமாட்டார்கள்.

7. இடக்கைப் பழக்கம்

இதைப் பற்றி நமக்கு நன்றாகத் தெரியும். இடக்கைப் பழக்கம் உள்ளவர்கள் அதிக அறிவாளியாகவும் எதையும் வேறு ஒருக் கண்ணோட்டத்தில் காண்பவர்களாகவும் இருப்பர்.

மேற்கண்ட பழக்கங்களில் ஏதாவது ஒன்று உங்களுக்கு இருந்தாலே நீங்கள் அறிவாளிகள் என்பதை உறுதியாகக் கூறலாம்.

HOT NEWS