பிரபல நடிகர் கிருஷ்ணமூர்த்தி மாரடைப்பால் காலமானார்!

07 October 2019 சினிமா
vadivelukrishnamoorthy.jpg

கேரளாவின் குமுளிப் பகுதியில், நடைபெற்று வந்த சனிமா சூட்டிங்கின் பொழுது, பிரபல காமெடி நடிகர் கிருஷ்ணமூர்த்தி, மாரடைப்பால் காலமானார்.

வடிவேலுவின் பல காமெடிகளில் நடித்தவர், இந்த கிருஷ்ணமூர்த்தி. இவரை வடிவேலுவின் பல காமெடி காட்சிகளில் நம்மால் பார்க்க முடியும். படித்துரை பாண்டி என்ற காமெடி நம் அனைவருக்குமே தெரியும். ஒசமா பின்லேடன் அட்ரஸ் தெரியுமா என, வடிவேலுவிடம் அவர் செய்யும் கலாட்டாக்களும் நம்மை ரசிக்க வைப்பவை.

அப்படிப்பட்ட பல படங்களில் நடித்த கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு, தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலரும், ரசிகர்களும் தங்களுடைய அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS