இனி பஞ்சாப் கிங்ஸ்! பெயர் மாற்றம் அடைந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

16 February 2021 விளையாட்டு
klrahulkxip.jpg

இன்னும் சில மாதங்களில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் நடைபெற உள்ள நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது, பஞ்சாப் கிங்ஸ் என, பெயர் மாற்றம் செய்ய உள்ளது.

இந்திய அளவில் பிரசித்திப் பெற்ற கிரிக்கெட் தொடர் என்றால் ஐபிஎல் தான். அந்த அளவிற்கு மிகக் குறுகியக் காலக் கட்டத்தில், இது மாபெரும் வரவேற்பினைப் பெற்றது. இது கடந்த ஆண்டு கொரோனா தொற்றுக் காரணமாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த சூழலில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியினை நடத்துவதில், ஐபிஎல் நிர்வாகம் தீவரமா செயல்பட்டு வருகின்றது. கடந்த ஆண்டு டெல்லி டேர்டெவிள்ஸ் அணியானது, டெல்லி கேப்பிடள்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தது.

அந்த சீசனில், மிகச் சிறப்பான ஆட்டத்தினையும் வெளிப்படுத்தியது. இதனைப் போலவே, தன்னுடைய அணியின் பெயரினையும் மாற்றம் செய்ய பஞ்சாப் அணியானது முடிவு செய்துள்ளது. அதன் படி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் என இருக்கின்ற பெயரினை, இந்த சீசனில் இருந்து பஞ்சாப் கிங்ஸ் என்று மாற்ற முடிவு செய்துள்ளது. இதனை, அந்த அணியின் நிர்வாகத்தினர் தீவிரமாக ஆலோசனை செய்து வருகின்றனர் என, கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS