புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்த கிம்! அதிரடி உத்தரவுகளை வெளியிட்டார்!

09 September 2020 அரசியல்
kimjongunse.jpg

வடகொரியாவில் புயலால் பாதிக்கப்பட்டு உள்ள பகுதிகளினை, அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் ஆய்வு செய்து உள்ளார்.

தொடர்ந்து, வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன், உயிருடன் இருக்கின்றாரா அல்லது இல்லையா என, பலருக்கும் சந்தேகம் நிலவி வந்தது. இந்நிலையில், அவைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக, அவ்வப்போது வெளியில் தலைக் காட்டுகின்றார் அதிபர் கிம். இந்நிலையில், மேசக் புயலானது, கிழக்கு சீனக் கடற்பகுதிகளினை, மிக மோசமாகத் தாக்கியது. இந்த புயலால், வடகொரியாவின் கடலோரப் பகுதிகளில் கடுமையான சேதம் ஏற்பட்டு உள்ளது.

குறிப்பாக வடகொரியாவின் வடக்கு மற்றும் தெற்கு ஹேம்மியாங் பகுதியில் 1000 கணக்கான வீடுகள் சிதைந்து உள்ளன. அவைகளை கிம் பார்வையிட்டதாக, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. அந்த வீடுகளை சரி செய்யவும், சேதங்களை சரி செய்யவும் கிம், தன்னுடைய கட்சியினருக்கு உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில், சுமார் 12000 பேர் சீரமைப்பு பணியில் ஈடுபட உள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

அடுத்த வாரம், புதிய புயலான ஹேய்சென் புயலானது, கரையை கடக்கும் என்பதால், வடகொரியா தற்பொழுது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

HOT NEWS