வடகொரிய அதிபர் கிம்மின் கண்ணீர்! நாடகமா அரசியலா? என்ன சொல்கின்ற ஊடகங்கள்!

14 October 2020 அரசியல்
kimjonguncried.jpg

என்னை மன்னித்து விடுங்கள் என, 75வது ஆண்டு நிறைவு விழாவில் பேசும் பொழுது, வடகொரிய அதிபர் கிம் கண்ணீர் விட்டார்.

வடகொரியா என்றாலே, பொய்யும் கட்டுக் கதைகளும் தான், உலகளவில் உலா வருகின்றன. அந்த நாடே வேண்டும் என்றே அவ்வாறு பொய்யைப் பரப்புகின்றதா, அல்லது மற்ற நாடுகள் அவ்வாறு செய்கின்றனவா என யாருக்கும் தெரியாது. ஆனால், அவ்வளவு மர்மம் நிறைந்த நாடாக அந்நாடு உள்ளது. அந்நாட்டு அதிபர் கிம் ஜோங் உன் இறந்துவிட்டார் என, பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளியாகின.

ஆனால், அவர் அந்த செய்திகளைப் பொய்யாக்கும் வண்ணம், பொது இடங்களுக்குச் சென்று மக்களை சந்தித்தார். இந்நிலையில், அந்நாட்டின் தொழிலாளர் கட்சியின் 75வது ஆண்டு நிறைவு விழாவானது கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில், அதிபர் கிம் உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில், புதிய ஏவுகணைகளும், இராணுவ பிரிவுகளும் இடம் பெற்று இருந்தன.

அந்தக் கூட்டத்தில் பேசிய கிம், நான் உங்களுக்கு எதுவுமே செய்யவில்லை. ஆனால், நீங்கள் என் மீது அதிகப் பாசம் வைத்துள்ளீர்கள். என் தாத்தாவும், தந்தையும் உங்களுக்காக அதிகம் செய்திருந்தனர். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம் உங்கள் மீது அதிக பாசம் வைத்துள்ளேன். கட்டாயம் உங்களுக்காக உழைப்பேன். விரைவில் நல்ல வளர்ச்சியினை நாம் அடைவோம் என்றுக் கூறிக் கொண்டே, அழுதுவிட்டார்.

அவ்வளவு தான். அங்கிருந்து பொதுமக்கள் பலரும் கண்ணீர் விட ஆரம்பித்து விட்டனர். அவர்களுடன் இராணுவ உயரதிகாரிகளும் கண்ணீர் விட ஆரம்பித்துவிட்டனர். இதுபற்றி செய்தி எழுதியுள்ள அமெரிக்க ஊடகங்கள், வடகொரிய மக்களின் அனுதாபத்தினைப் பெறுவதற்காகவே இவ்வாறு கிம் அழுவதாகவும், மற்றபடி, எதுவும் கிடையாது எனவும் கூறியுள்ளன. வடகொரியாவில் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பஞ்சம் நிலவி வருவதாகவும், அதனை மறைக்க அவ்வப்பொழுது இராணுவ பயிற்சி, ஏவுகணை சோதனை, மற்றும் இது போன்ற டிராமாக்களை கிம் செய்வதாகவும் கூறியுள்ளன.

HOT NEWS