நிலச்சரிவில் வீடு இழந்தவர்களுக்கு புதிய வீடு! கேரள அரசு உறுதி!

15 August 2020 அரசியல்
keralacm.jpg

கேரளாவில் நிலச்சரிவில் சிக்கி இழந்த வீடுகளுக்குப் பதில், புதிய வீடுகள் கட்டித் தரப்படும் என, கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியுள்ளார்.

கேரளாவில் உள்ள இடுக்கி மாவட்டம் பெட்டிமுடி பகுதியில், கடந்த 7ம் தேதி அன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்குள்ள குடியிருப்புகள் தங்கியிருந்த 80க்கும் மேற்பட்டோர் இந்த நிலச்சரிவில் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதுவரை, அந்த நிலச்சரிவுகளில் சிக்கி 55 பேர் பலியாகி உள்ளனர். 12 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு உள்ளனர். 15 பேரைத் தேடும் பணி இன்னும் நடைபெற்று வருகின்றது.

இந்த சூழ்நிலையில், நேற்று கேரள முதல்வர் பினராய் விஜயனும், ஆளுநர் ஆரிப் முகம்மது ஆகியோரும் உயரதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்தனர். அப்பொழுது செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் பினராய் விஜயன், நிலச்சரிவில் வீடுகளைப் பறிகொடுத்தவர்களுக்கு கட்டாயம் வீடு கட்டித் தரப்படும் என்றுக் கூறினார். இங்கு நிலவுகின்ற அசாதாரண வானிலையிலும் கூட, மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரர்களுக்கும், பொதுமக்களுக்கும் நன்றித் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS