கடைசி மூச்சு உள்ள வரை போராடுவேன்! ஜடேஜா உணர்ச்சிமிகு டிவீட்!

12 July 2019 விளையாட்டு
ravindrajadeja.jpg

என்னுடைய கடைசி மூச்சு உள்ள வரை போராடுவேன் என, கிரிக்கெட் வீரர் டிவீட் செய்துள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி, நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அந்தப் போட்டியில், ரவீந்திர ஜடேஜா அதிரடியாக விளையாடி 77 ரன்கள் குவித்தார். அது குறித்து அவர் செய்துள்ள டிவீட்டில், விளையாட்டு வெற்றித் தோல்விகளைக் கடந்து, எழுவதற்கு கற்றுக் கொடுத்துள்ளது. நான் விட்டுக் கொடுக்கமாட்டேன். அனைத்து ரசிகர்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள். நன்றி என்பது ஒவ்வொரு ரசிகருக்கும் போதாத ஒன்று. அந்த அளவிற்கு எனக்கு ஊக்கமளித்துள்ளீர்கள். நான் என்னுடைய இறுதி மூச்சு உள்ளவரை, என்னுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன், நன்றி எனத் தெரிவித்துள்ளார்.

இது டிவிட்டரில், 27 ஆயிரம் ரிடீவிட்டுகளையும், 2,09,000 லைக்குகளையும் அள்ளியுள்ளது.

HOT NEWS