ஜாக்பாட் திரைவிமர்சனம்!

02 August 2019 சினிமா
jackpot.jpg

ரேட்டிங்:-2.5/5

சூர்யாவிற்கு வருடம் ஒரு படம் என்றால், ஜோதிகாவிற்கு ஒரு படம் வெளியாகின்றது. சென்ற மாதம் தான் ராட்சசி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில், இன்று ஜாக்பாட் திரைப்படம் வெளியாகி உள்ளது.

ஜோதிகா, ஏவதி, ஆனந்த்ராஜ், மொட்டை ராஜேந்திரன், மன்சூர் அலிகான், யோகி பாபு என பெரிய நடிகர் பட்டாளமே இணைந்துள்ள திரைப்படம் தான் ஜாக்பாட். இதற்கு ஜாக்பாட் என்று பெயர் வைத்ததற்குப் பதில், குலேபகாவலி 2 எனப் பெயர் வைத்து இருக்கலாம். ஏனெனில், இரண்டிற்கும் ஒரே விதமான திரைக்கதை தான். பெரிய வித்தியாசம் இல்லை.

பிரபுதேவா இல்லை ஹன்சிகாவும் இல்லை. மற்றப்படி, அனைவரும் இருக்கின்றனர். அதே சமயம், இவர்கள் இருவரின் கதாப்பாத்திரத்தையும் ஜோதிகா செய்துவிட்டார். கதை ஒன்றும் பெரியதும் இல்லை, புதியதும் இல்லை, அக்ஷயப் பாத்திரத்தை திருடுவதுதான் கதை. ஆனந்த் ராஜ் வீட்டில் புதைக்கப்பட்டுள்ள அக்ஷயப் பாத்திரத்தை இவர்கள் திருடினார்களா? இல்லையா? என்பதனை வழக்கம் போல் காமெடியாக காட்டியிருக்கிறார் இயக்குநர் கல்யாண். இவர் தான் குலேபகாவலியின் இயக்குநர் ஆவார்.

நீங்கள் குலேபகாவலி பார்த்து இருந்தீர்கள் என்றால், கண்டிப்பாக நாம் கூறுவதை ஏற்றுக் கொள்வீர்கள். குலேபகாவலியில் எதைப் பார்த்து ரசித்தீர்களோ, அதையே இந்தப் படத்திலும் பார்த்து ரசிக்க இயலும். படத்தில், மற்ற நடிகர்களைக் காட்டிலும், ஆனந்த் ராஜ் செய்யும் காமெடிகள் தான், நம்மை படத்தைப் பார்க்க வைக்கின்றன. ஒரு முக்கியமான விஷயம், இந்தப் படத்தில் ஆனந்த் ராஜ் பெண் கெட்டப்பிலும் நடித்துள்ளார். அது அதற்கு மேல் காமெடியாக உள்ளது. அனைவரும் ரசிக்கும் விதத்திலேயே எடுத்துள்ளனர். இருப்பினும், இன்னும் கொஞ்சம் காமெடியாக எடுத்து இருக்கலாம்.

படத்தில், கதையில் லாஜிக்கில்லாம் பார்க்காதீர்கள். அப்புறம் வருத்தப்படுவீர்கள். படத்தைக் காமெடியாக எடுக்க வேண்டும் என்ற, ஒரேக் குறிக்கோளை கண்டிப்புடன் கடைப்பிடித்துள்ளனர். அது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. ஜோதிகாவின் நடிப்பு மிக அருமை. சண்டைக் காட்சிகள், காமெடிக் காட்சிகள் என அனைத்துக் காட்சிகளும் தன்னுடையத் திறமையை வழக்கம் போல் வெளிப்படுத்தி உள்ளார்.

இந்தப் படத்தில் ரேவதி கொஞ்சம் அழகாக காட்சியளிக்கிறார். அவருடையக் கதாப்பாத்திரமும் நம்மை சிரிக்கவும், ரசிக்கவும் வைக்கிறது.

ஜாக்பாட்-குலேபகாவலி 2

HOT NEWS