தங்கத் தாரகையின் 4வது ஆண்டு நினைவுநாள்! உங்களுக்காகவே நான்! உங்களால் நான்!

05 December 2020 அரசியல்
jayalalitha.jpg

தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுக கட்சியின் பொதுச் செயலாளருமான செல்வி. ஜெ. ஜெயலலிதா மறைந்து, இன்றுடன் 4 ஆண்டுகள் நிறைவடைகின்றன.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உட்பட 127 படங்களில் நடித்து அசத்தியவர் ஜெயலலிதா. தமிழில் இவருடன் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை எனவும் அளவிற்கு, இவர் மிகத் திறமையான நடிகையாக வலம் வந்தார். நடித்த படங்கள் எல்லாம் வெற்றிப் பெற்றதால், அவருடைய மார்க்கெட்டானது, உயர்ந்து கொண்டே இருந்தது. ஏழு மொழிகளில் சரளமாகப் பேசத் தெரிந்த அவர், தமிழில் பாடல்களும் பாடியுள்ளார்.

1980ம் ஆண்டு அஇஅதிமுக கட்சியில் இணைந்த அவர், பின்னர் படிப்படியாக வளர்ந்து பொதுச் செயலாளராக அதிமுக கட்சியின் உயர்ந்தார். பல கஷ்டங்களுக்குப் பிறகு, எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுகவினை ஒரு கட்டுப்பாட்டுடைய கட்சியாக அவர் மாற்றினார். ஆறு முறை தமிழக முதலமைச்சர், 29 ஆண்டுகள் அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எனப் பலப் பதவிகளுக்கு சொந்தக்காரராகவும், எதிரிகளுக்கு சிம்ம சொப்பணமாகவும் இருக்க உள்ளார்.

கட்டாய மழைநீர் சேமிப்பு, இலவச மிக்ஸி, கிரைண்டர், இலவச ரேஷன் அரிசி, அம்மா உணவகம், மகளிர் காவல்நிலையம் உள்ளிட்டப் பலத் திட்டங்களை உருவாக்கியவர். தாலிக்கு தங்கம், பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் பாலூட்டும் அறை எனப் பல விஷயங்களைப் பெண்களுக்காக செய்தவர். 2015ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற சில மாதங்களிலேயே, உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அது தான் அனைவரும் அவரை கடைசியாகப் பார்த்தது. அதற்கு அடுத்து, அனைவருமே அவரை இறுதி அஞ்சலி நாளில் தான் பார்த்தனர் என்பது வேதனை மிகுந்த விஷயமாகும். இன்று வரை மர்மாக உள்ள விஷயங்களில், ஜெயலலிதாவின் மரணமும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS