கொரோனா எதிரொலி! டி20 உலகக் கோப்பை நடத்தப்படுமா? அறிவிப்பு வெளியானது!

19 March 2020 விளையாட்டு
iccworldt20.jpg

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்டவை தற்காலிகமாக, மறுதேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன.

இந்தியாவின் பிரசித்திப் பெற்ற கிரிக்கெட் போட்டியான, ஐபிஎல் டி20 போட்டிகளும் மறுதேதி குறிப்பிடப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஒலிம்பிக் போட்டிகளும் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

உலக அளவில் பிரசித்திப் பெற்றதும், உலகக் கோப்பை கால்பந்து விளையாட்டிற்கு அடுத்ததுமான யூரோ கால்பந்து போட்டிகள், அடுத்த ஆண்டிற்கு ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி நவம்பர் வரை சர்வதேச உலகக் கோப்பை டி20 போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் போட்டியானது, அக்டோபர் 18ம் தேதி தொடங்கி, நவம்பர் 15ம் தேதி வரை, ஆஸ்திரேலியாவில் நடைபெறத் திட்டமிடப்பட்டு இருந்தது. ஏழாவது ஐசிசி டி20 உலகக் கோப்பை நடத்துவதுக் குறித்து, ஐசிசி அமைப்பானது, கூட்டம் நடத்தியது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில், திட்டமிட்டப்படி கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும் எனவும், அதற்குள் நிலைமை சரியாகிவிடும் என நம்புவதாகவும், தெரிவித்துள்ளது. இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

HOT NEWS