ஐபில் 2020க்கான ஏலம் கொல்கத்தாவில் நடைபெற உள்ளது!

01 October 2019 விளையாட்டு
iplauction.jpg

இப்பொழுது தான், ஐபிஎல் போட்டிகள் முடிந்த மாதிரி இருந்தது. அதற்குள் அடுத்த ஐபிஎல் போட்டிக்கான, ஏலம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதற்கான, அணிகள் மற்றும் வீரர்கள் ஏலம் குறித்த முக்கியத் தகவல் வெளியாகி உள்ளது. வரும் டிசம்பர் மாதம் 19ம் தேதி, கொல்கத்தாவில், ஐபிஎல் போட்டிகான ஏலம் நடைபெற உள்ளது.

பொதுவாக பெங்களூருவில் மட்டுமே, இந்த ஐபிஎல் ஏலம் நடைபெறுவது வழக்கம். ஆனால், இம்முறை ஒரு மாற்றத்திற்காக கொல்கத்தாவில் நடைபெற உள்ளது. இந்த ஏலம் சிறிய அளவில் இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில், வரும் 2021ம் ஆண்டு, அனைத்து அணிகளும் புதிய அணிகள் மற்றும் வீரர்கள் இடம்பெற உள்ள நிலையில், இந்த முறை ஏலம், சற்று சிறிய அளவில் இருக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகின்றது.

ஒவ்வொரு அணியும், இதில் சுமார் 85 கோடி வரை செலவு செய்து தங்கள் அணிக்கு வீரர்களை வாங்கிக் கொள்ள இயலும். மேலும், கடந்த தொடரில், சேமித்த 3 கோடி ரூபாயை இதில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

HOT NEWS