அதிர வைக்கும் ஐபிஎல் ஏலம்! ஏகிறும் வீரர்களின் மதிப்பு!

13 February 2021 விளையாட்டு
iplauction.jpg

இன்னும் சில நாட்களில் ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலமானது சென்னையில் நடைபெற உள்ளதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, ஐபிஎல் கிரிக்கெட் அணிகள் அனைத்தும், தங்களுடைய அணியில் இருந்து வீரர்களை நீக்கியும், தக்க வைத்தும் புதிய பட்டியலை வெளியிட்டனர். அதன்படி, தற்பொழுது அணிகளில் இருந்து நீக்கப்பட்ட வீரர்களுடன் புதிதாக ஐபிஎல் கலந்து கொள்வதற்கு சுமார், 1114 பேர் விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்து இருந்தனர். இதில், தற்பொழுது 292 வீரர்களை மட்டும் ஏலத்தில் விடுவதற்கு ஐபிஎல் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த ஏலமானது வருகின்ற 18ம் தேதி அன்று நடைபெற உள்ளது.

அதிலும் 164 இந்திய வீரர்களும், 125 வெளிநாட்டு வீரர்களும், 3 அசோசியேட் நாட்டு வீரர்களும் அடங்குவர். இவர்களில் இந்திய வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் கேதர் ஜாதவிற்கு குறைந்தபட்ச விலையாக 2 கோடியானது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதே போல் வெளிநாட்டு வீரர்கள் ஸ்டீவ் ஸ்மித், மேக்ஸ்வெல், சாகிப் அல் ஹசன், மோயின் அலி, சாம் பில்லிங்ஸ், ஜேசன் ராய், பிளங்க்கெட், மார்க்உட் ஆகியோரும் 2 கோடி குறைந்தபட்ச விலையில், ஏலத்திற்கு வந்துள்ளனர்.

அதே போல் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கருக்கு 20 லட்ச ரூபாயானது குறைந்தபட்ச விலையானது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. தமிழக வீரர் முரளி விஜயின் பெயரானது ஏலத்தில் இல்லை. எட்டு அணிகளும் சேர்த்து மொத்தமாக 61 வீரர்களை ஏலத்தில் எடுக்க இயலும். தமிழகத்தின் ஜி பெரியசாமிக்கும் குறைந்தபட்ச விலையாக 20 லட்சமானது நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS