டிக்டாக்கினைத் தூக்கிப் போட்டு சிங்காரியினைப் பிடித்த இந்தியர்கள்!

24 June 2020 தொழில்நுட்பம்
chingari.jpg

சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையில், பிரச்சனைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து தற்பொழுது இந்தியாவினைச் சேர்ந்தவர்கள் டிக்டாக் ஆப்பினை தடை செய்ய கோரி வருகின்றனர்.

பலரும், தங்களுடைய ஸ்மார்ட்போன்களில் இருந்து டிக்டாக் ஆப்பினை, நீக்கி வருகின்றனர். இந்த ஆப்பில் இந்தியர்கள் தங்களுடையப் பொன்னான நேரத்தினை வீணாக்கி வந்தனர். இந்த ஆப்பிற்கு, பல லட்சம் இந்தியர்கள் அடிமையாகிப் போகினர் என்பது தான் நிதர்சனமான உண்மை.

இந்த சூழ்நிலையில் இந்த ஆப்பிற்குப் பதிலாக, தற்பொழுது புதிய ஆப்பினைப் பயன்படுத்தத் தொடங்கி உள்ளனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சிங்காரி என்றப் புதிய ஆப்பானது, தற்பொழுது டிரெண்டாகி வருகின்றது. இந்த ஆப்பினை, இந்தியாவின் பெங்களூரு நகரினைச் சேர்ந்த மென்பொருள் தயாரிப்பாளர்கள் உருவாக்கி உள்ளனர். மேலும், இந்த ஆப்பில் பதிவேற்றம், பதிவிறக்கம், வீடியோ, ஆடியோ, புகைப்படம் அனுப்புதல், சேட்டிங் வசதி, மீம்ஸ்கள் என சகல வசதிகளும் உள்ளன.

இந்த ஆப்பினை, ஒரே நாளில் தற்பொழுது ஒரு லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து உள்ளனர். அதே போல், 10,000க்கும் அதிகமானோர் தங்களுடைய வீடியோக்களை பதிவிட ஆரம்பித்து உள்ளனர். தமிழ் உட்படப் பல மொழிகளை உள்ளடக்கியதாக இந்த ஆப் உள்ளது. தற்பொழுது வரை 10,00,000 பேர் இதனை பதிவிறக்கம் செய்துள்ளனர். வெறும் 34 எம்பி உள்ள இந்த ஆப்பானது, விரைவில் இந்திய அளவில் பிரபலம் அடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

BREAKING

சக்ரா திரைவிமர்சனம்!
மேற்கு வங்கத் தேர்தல் கணிப்பு! திரிணாமுல் VS பாஜக? யாருக்கு வெற்றி?
விவசாயிகளை தடுக்கு முள் வேலி! காண்க்ரீட் தடுப்புகள்! இரும்பு பேரிகேடுகள்!
சித்ரா தூக்கிட்டு தான் தற்கொலை செய்து கொண்டார்! நிபுணர் குழு அறிக்கை!
லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன்! படு திரில்லராக உருவாக உள்ளதாக படக்குழு அறிவிப்பு!
ரேஸ் காட்சிக்காக வெளிநாடு சென்றுள்ள வலிமை குழு! உற்சாகத்தில் ரசிகர்கள்!

HOT NEWS