இந்தியாவில் இனி 4 நாள் தான் வேலை! 3 நாள் லீவ்!

10 February 2021 தொழில்நுட்பம்
childlabour.jpg

இந்தியாவின் வேலை நாட்களை மாற்றி அமைத்து, இனி 4 நாட்கள் மட்டும் வேலை நாட்களாகவும், 3 நாட்களை விடுமுறை நாட்களாகவும் அறிவிக்க, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்பொழுது நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரானது, நடைபெற்று வருகின்றது. வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் துறையானது புதிய திட்டத்தினை தீட்டி வருகின்றது. அதன்படி, இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை நாட்களாகவும், மீதமுள்ள 3 நாட்களை விடுமுறை நாட்களாகவும் அறிவித்துக் கொள்ள கம்பெனிகளுக்கு அதிகாரம் வழங்க முடிவு செய்துள்ளது. அதே சமயம், வேலை செய்யும் நேரத்தினை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்திக் கொள்ளவும் அனுமதி வழங்க ஆலோசனை செய்து வருகின்றது.

அவ்வாறு செய்கின்ற பட்சத்தில், வேலைக்குச் செல்பவர்கள் இனி வாரத்திற்கு நான்கு நாட்கள், 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். அத்துடன், வாரத்திற்கு 40 மணி நேரம் வேலை பார்த்து வந்த நிலையில், இனி 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்ற சூழல் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இது உலக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு நிதியத்திற்கு எதிரானது இல்லை. காரணம் என்னவென்றால், ஒரு வாரத்திற்கு மொத்தம் 48 மணி நேரம் வேலை செய்ய அந்த ஆணையம் அனுமதி வழங்குகின்றது.

ஆனால், இந்தியாவினைப் பொறுத்தமட்டில், ஒரு வாரத்திற்கு 48 மணி நேரத்திற்கும் கூடுதலாகவே வேலை செய்கின்றனர். அதாவது ஒரு நாளைக்கு 8 மணி நேரத்திற்கும் மேலாகவே, வேலை செய்கின்றனர். உலகிலேயே இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தப் போகும் முதல் நாடு இந்தியா தான். காரணம் 2020ம் ஆண்டு முதல், இந்தத் திட்டத்தினை அமல்படுத்தும் முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டு வருகின்றது. இதற்கு முன்னர், மைக்ரோசாஃப்ட் நிறுவனமானது, ஜப்பானில் உள்ள தன்னுடைய அலுவலகத்தில் இந்தத் திட்டத்தினை 2019ம் ஆண்டு பரிசோதனை செய்தது.

இவ்வாறு 4 நாள் வேலைத் திட்டத்தினை அமல்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு கார்ப்பரேட் கம்பெனியும் சுமார் 2% கூடுதல் வருவாயினை ஈட்ட முடியும் எனக் கணிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS