இந்தியா வெற்றி! நடராஜன் அசத்தில்! பாண்டியா வெறித்தனம்! தொடரினை கைப்பற்றியது!

06 December 2020 விளையாட்டு
nattunatarajan.jpg

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் நடைபெற்ற 2வது டி20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று, தொடரினைக் கைப்பற்றியது.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மைதனாத்தில் நடைபெற்ற போட்டியில், இந்திய அணி டாஸ் வென்று பந்துவீச்சினை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு, 194 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் வேட் 58, சார்ட் 9, ஸ்மித் 46,மேக்ஸ்வெல் 22, ஹென்ரிக்கஸ் 26, ஸ்டோய்னிஸ் 16, சாம்ஸ் 8 ரன்களை எடுத்தனர். இந்திய அணியின் சார்பில் நடராஜன் 2 விக்கெட்டுகளையும், தாக்கூர் மற்றும் சாஹர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணிக் களமிறங்கியது.

19.4 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து, 195 ரன்களைக் குவித்தது. கேஎல் ராகுல் 30, தவான் 52, விராட் கோலி 40, சாம்சன் 15, ஹர்திக் பாண்ட்யா 42, ஸ்ரேயஸ் ஐயர் 12 ரன்களை எடுத்தனர். கடைசி ஓவரில், ஹர்திக் பாண்ட்யா 2 சிக்சர்கள் அடித்து, வெற்றியினை உறுதி செய்தார். ஆஸ்திரேலியாவின் சார்பில், டை, ஸ்வெப்சன் மற்றும் சாம்பா ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

மூன்று போட்டிகள் கொண்டத் தொடரில், இந்திய 2-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்று தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

HOT NEWS