கோப்பையினை வென்ற இந்திய அணி! பிசிசிஐ போனஸ் அறிவிப்பு!

19 January 2021 விளையாட்டு
indauswon.jpg

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையினைக் கைப்பற்றியது.

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையில் நடைபெற்ற 4வது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்று கோப்பையினைக் கைப்பற்றியது.

இதனைத் தொடர்ந்து முதல் இன்னிங்சில் இந்திய அணியானது, 336 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தாக்கூர் 67 ரன்களும், சுந்தர் 62 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியாவின் ஹசல்வுட் 5 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் மற்றும் கும்மின்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், லைன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 2வது இன்னிங்கசில் ஆஸ்திரேலிய அணியானது, 294 ரன்களைக் குவித்தது. ஸ்மித் 55 ரன்களும், வார்னர் 48 ரன்களும் குவித்தனர்.

சிராஜ் 5 விக்கெட்டுகளையும், தாக்கூர் 4 விக்கெட்டுகளையும், சுந்தர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 2வது இன்னிங்சினை தொடங்கி இந்திய அணி கடைசி நாளான இன்று அதிரடியாக விளையாடி ரன் குவிப்பில் ஈடுபட்டது. அதில் கில் 91 ரன்களும், பண்ட் 89 ரன்களும் சேர்த்தனர். வெறும் 7 விக்கெட்டுகளை இழந்து, இந்திய அணி 329 ரன்களைக் குவித்தது. ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும், லைன் 2 விக்கெட்டுகளையும், ஹசல்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்திய அணி, டெஸ்ட் கோப்பையினை கைப்பற்றி புதிய சாதனையினை படைத்தது. எவ்வித நட்சத்திர ஆட்டக்காரர்களும் இல்லாத நிலையில், இந்த ஒரு வெற்றியினை இந்திய அணி பதிவு செய்துள்ளது. இதற்கு, பாரதப் பிரதமர் மோடி, அமித் ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கூகுள் சிஈஓ சுந்தர் பிச்சை உள்ளிட்டப் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். இந்த வெற்றியின் காரணமாக, 5 கோடி ரூபாயினை போனஸாக, பிசிசிஐ அறிவித்து உள்ளது.

HOT NEWS