இந்தியா வெற்றி! நடராஜன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்!

04 December 2020 விளையாட்டு
nattunatarajan.jpg pic credit:twitter.com/BCCI

இந்தியாவிற்கும் ஆஸ்திரேலியாவிற்கும் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இன்று ஆஸ்திரேலியாவின் மானுக்கா மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சினைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்களைக் குவித்தது. இந்தியாவின் ராகுல் 51, தவான் 1, கோலி 9, சாம்சன் 23, மனீஸ் பாண்டே 2, ஹர்திக் பாண்ட்யா 16, ஜடேஜா 44, வாஷிங்டண் சுந்தர் 7 ரன்களைக் குவித்தனர். ஆஸ்திரேலியாவின் ஹென்ரிக்கெஸ் 3 விக்கெட்டுகளையும், ஸ்டார்க் 2 விக்கெட்டுகளையும், சாம்பா மற்றும் ஸ்வெப்சன் தலா ஒரு விக்கெடும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து, 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணிக் களமிறங்கியது. ஆரம்பத்தில் அதிரடியாக விளையாடிய ஆஸ்திரேலிய அணி ரன் குவிப்பில் ஈடுபட்டது. இருப்பினும், இந்தியாவின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி ஆட்டத்தின் போக்கினை மாற்றினர். ஆஸ்திரேலிய அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து, 150 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியின் சார்ட் 34, பின்ச் 35, ஸ்மித் 12, மேக்ஸ்வெல் 2, ஹென்ரிக்கஸ் 30, வேட் 7, ஆபாட் 12, ஸ்டார்க் 1 மற்றும் ஸ்வப்சன் 12 ரன்களை எடுத்தனர்.

இந்தியாவின் சாஹல் மற்றும் நடராஜன் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி, தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாஹர் ஒரு விக்கெட் வீழ்த்தினார். 3 போட்டிகள் கொண்ட தொடரில், 1-0 என்றக் கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கின்றது.

HOT NEWS