இந்திய அணி முன்னிலை! தென் ஆப்பிரிக்கா திணறல்!

04 October 2019 விளையாட்டு
rohitsharma100.jpg

இந்தியா, தென்ஆப்பிரிக்கா இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் உள்ள, ராஜசேகர ரெட்டி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 136 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் குவித்துள்ளது. ரோகித் ஷர்மா 176 ரன்களும், மயங்க் அகர்வால் 215 ரன்களும் குவித்தனர். புஜாரா 6, கோலி 20, ரஹானே 15, ஜடேஜா 30, விஹாரி 10, சாஹா 21 ரன்கள் எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்கா சார்பில், மஹாராஜ் 3 விக்கெட்டுகளையும், பில்லாண்டர், டேன், முத்துசாமி மற்றும் டீன் எல்கார் ஆகியோர், தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

கடினமான இலக்கினை நோக்கி, தன்னுடைய முதல் இன்னிங்சினைப் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 58 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் எடுத்துள்ளது. எல்கார் 94 ரன்களும், மார்க்கரம் 5, பூருயன் 4, பீட் 0, பவுமா 18, டூ பிளசிஸ் 55 ரன்களும் எடுத்துள்ளனர்.

இந்திய அணியின் அஸ்வின் 3 விக்கெட்டுகளும், இஷாந்த் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தியுள்ளனர். கடினமான, இலக்கினை இந்திய அணி நிர்ணயித்துள்ளதால், இன்னும் இரண்டு நாட்கள் உள்ள நிலையில், இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

HOT NEWS