சூப்பர் ஓவரில் அசத்தல் பேட்டிங்! 3-0 என்ற கணக்கில் இந்தியா வெற்றி!

29 January 2020 விளையாட்டு
indiawont20.jpg

இந்தியாவிற்கும், நியூசிலாந்திற்கும் இடையில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில், இந்தியா அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.

ஹேமில்டன் சிடாம் பார்க் மைதானத்தில், இன்று இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையில் மூன்றாவது டி20 போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சினை தேர்வு செய்தது.

இதனையடுத்து, இந்திய அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு, 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் வீரர்கள் ரோகித் ஷர்மா 65 (40), லோகேஷ் ராகுல் 27(19), சிவாம் டூபே 3(7), விராட் கோலி 38(27), ஷ்ரேயஸ் ஐயர் 17(16), மணீஷ் பாண்டே 14(6), ரவீந்திர ஜடேஜா 10(5) ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து சார்பில், பெண்ணட் 54 ரன்கள் விட்டுக் கொடுத்து, 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். சாண்ட்னர் மற்றும் கிராண்ட்ஹோம் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. கப்டில் 31(21), முன்ரோ 14(16), வில்லியம்சன் 95(48), சாண்ட்னர் 9(11), கிராண்ட்ஹோம் 5(12), டெய்லர் 17(10) ரன்கள் எடுத்தனர். ஆட்டம் சமநிலையை அடைந்ததால், சூப்பர் ஓவர் அனுமதிக்கப்பட்டது.

இதில், ஒரு ஓவரில் நியூசிலாந்து அணி 17 ரன்களை குவித்தது. 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணியின் வீரர்கள் களமிறங்கினர். இதில், ரோகித் ஷர்மாவின் அதிரடி ஆட்டத்தால், இந்திய அணி 18 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.

HOT NEWS