தென் ஆப்பிரிக்கா வெற்றி! இந்தியா தோல்வி!

22 September 2019 விளையாட்டு
indvssa3rdt20.jpg

Crdit:twitter.com/bcci

இன்று நடைபெற்ற பரபரப்பான டி20 ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா அணி, இந்திய அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றிப் பெற்றது.

இந்தியா சுற்றுப் பயணம் வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி, டி20 தொடரில் தற்பொழுது விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில், இந்திய அணி அபாரமாக வெற்றிப் பெற்று, 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டி, இன்று மாலைத் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. இதில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், இந்திய அணி 134 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் வீரர்கள் ஷிகார் தவான் 36(25), ரோகித் ஷர்மா 9(8), கோலி 9(15), ரிஷாப் பண்ட் 19(20), ஷ்ரேயஸ் ஐயர் 5(8), ஹர்திக் பாண்ட்யா 14(18), க்ரூணல் பாண்ட்யா 4(7), ரவீந்த்ரா ஜடேஜா 19(17), வாஷிங்டன் சுந்தர் 4(1) ரன்களை எடுத்தனர்.

தென் ஆப்பிரிக்க அணியின் சார்பில், ரபாடா 3 விக்கெட்டுகளையும், ஹென்ட்ரிக்ஸ் மற்றும் ஃபார்ட்டின் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஷாம்சி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. ஹென்ட்ரிக்ஸ் 28(26), டீ காக் 79(52) மற்றும் பவுமா 27(23) ரன்களும் சேர்த்து வெற்றி பெற்றனர். இந்திய அணியின் ஹர்திக் பாண்ட்யா, ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இந்த டி20 தொடரில், இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகளுமே தலா ஒரு போட்டியில் வென்றுள்ளனர்.

HOT NEWS