கோலி, தோனி இல்லாததை ஆட்டத்தில் உணர முடிந்தது! இந்தியா முதல் தோல்வி!

04 November 2019 விளையாட்டு
indvsban.jpg

வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்தது. இதுவரை வங்கதேச அணியிடம் ஒரு டி20 போட்டியிலும் தோல்வி அடையாத இந்திய அணி, முதன் முதலாக வங்கதேச அணியிடம் நேற்றுத் தோல்வியினைத் தழுவியது.

டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில், இரவு ஏழு மணிக்கு நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில், இந்திய கிரிக்கெட் அணியும், வங்கதேச கிரிக்கெட் அணியும் மோதின. மோசமான காற்றுள்ள நிலையிலும், டெல்லியில் இப்போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பந்து வீச்சினைத் தேர்வு செய்தது.

இதனால், முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், ஆறு விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா 9(5), ஷிகர் தவான் 41(42), லோகேஷ் ராகுல் 15(17), ஷ்ரேயஸ் ஐயர் 22(13), ரிஷாப் பண்ட் 27(26), சிவாம் தூபே 1(4), க்ரூணல் பாண்ட்யா 15(8) மற்றும் வாஷிங்டண் சுந்தர் 14(5) ரன்களும் எடுத்தனர்.

வங்கதேசம் சார்பில், சைபுல் இஸ்லாம் மற்றும் அமினுல் இஸ்லாம் ஆகியோர் இரண்டு விக்கெட்டுகளையும், அபிப் ஹோசைன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தியுள்ளது.

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணிக் களமிறங்கியது. வங்க தேச அணியின் வீரர்கள் தாஸ் 7(4), நைம் 26(28), சௌமியா சர்கார் 39(35), ரஹீம் 60(43) மற்றும் மஹமத்துல்லா 15(7) ரன்கள் எடுத்தனர். வங்க தேச அணி 19.3 ஓவரில் வெறும் மூன்று விக்கெட்டுகளை இழந்து, 154 ரன்கள் எடுத்து வென்றது.

இந்திய அணியின் சார்பில், சாஹர், கலீல் அஹமது மற்றும் சாஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் இருந்து, விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. மேலும், தோனியும் இப்பொழுது விளையாடுவது இல்லை. இவர்கள் இருவரும் இல்லாததை, ஆடுகளத்தில் உணர்ந்ததாக கிரிக்கெட் ரசிகர்கள் கூறுகின்றனர்.

HOT NEWS