இந்தியா தோல்வி! நியூசிலாந்து அதிரடி வெற்றி!

24 February 2020 விளையாட்டு
viratkohlitest.jpg

இந்தியாவிற்கும், நியூசிலாந்திற்கும் இடையில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தோல்வி அடைந்தது. கடந்த 20ம் தேதி தொடங்கிய இந்த ஆட்டத்தில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி, பந்துவீச்சினைத் தேர்வு செய்தது.

முதல் இன்னிங்ஸில், இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 165 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரித்வி ஷா 16(18), மயங்க் அகர்வால் 34(84), சத்தீஸ்வர் புஜரா 11(42), விராட் கோலி 2(7), அஜிங்கியா ரஹானே 46(138), ஹனுமந்த் விகாரி 7(20), ரிஷாப் பண்ட் 19(53), ரவிச்சந்திரன் அஸ்வீன் 0(1), இஷாந்த் ஷர்மா 5(23), மொஹமத் ஷமி 21(20), ஜஸ்ப்ரீத் பும்ரா 0(3) ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் சார்பில், ஜேமிஸன் மற்றும் சௌத்தீ ஆகியோர் தலா நான்கு விக்கெட்டுகளையும், போல்ட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 100 ஓவர் விளையாடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 348 ரன்களை குவித்தது.

அந்த அணியின் வீரர்கள், டாம் லாதம் 11(30), ப்ளண்டல் 30(80), கேன் வில்லியம்சன் 89(153), ரோஸ் டெய்லர் 44(71), நிக்கோல்ஸ் 17(62), வால்டிங் 14(30), கிராண்ட்ஹோம் 43(74), சௌத்தீ 6(13), ஜேமிசன் 44(45), அஜிஸ் பட்டேல் 4(20), போல்ட் 38(24) ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் சார்பில், இஷாந்த் ஷர்மா ஐந்து விக்கெட்டுகளையும், அஸ்வின் மூன்று விக்கெட்டுகளையும், மொஹமத் ஷமி மற்றும் பூம்ரா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர், தன்னுடைய இரண்டாவது இன்னிங்சினை இந்திய அணித் தொடங்கியது.

இந்திய வீரர்கள் மளமளவென விக்கெட்டுகளை இழந்து, தோல்வி அடைந்தனர். பிரித்வீ ஷா 14(30), மயங்க் அகர்வால் 58(99), சத்தீஸ்வர் புஜரா 11(81), விராட் கோலி 19(43), அஜிங்கியா ரஹானே 29(75), ஹனுமந்த் விகாரி 15(79), ரிஷாப் பண்ட் 25(41), ரவிச்சந்திரன் அஸ்வின் 4(11), இஷாந்த் ஷர்மா 12(21), மொஹமத் ஷமி 2(3) மற்றும் ஜஸ்ப்ரீத் பூம்ரா 0(3) ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து சார்பில், சௌத்தீ ஐந்து விக்கெட்டுகளையும், போல்ட் நான்கு விக்கெட்டுகளையும், கிராண்ட்ஹோம் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் டாம் லாதம் 7 ரன்களும், பிளண்டல் 2 ரன்களும் எடுத்து வெற்றி பெற்றனர். இதனால், நியூசிலாந்து அணி, பத்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

HOT NEWS