இந்திய அணி தோல்வி! நியூசிலாந்து அணி ஒயிட் வாஷ் செய்தது!

02 March 2020 விளையாட்டு
viratkohlitest1.jpg

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும், இந்திய அணி படுதோல்வியினை அடைந்தது. இதனால் இரண்டு டெஸ்ட்டுகள் கொண்டத் தொடரில், 2-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி வென்று தொடரினைக் கைப்பற்றியது.

கடந்த பிப்ரவரி 29ம் தேதி தொடங்கிய இரண்டாவது டெஸ்ட் போட்டியானது, ஹாக்கிலே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சினைத் தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து, இந்திய அணி பேட்டிங் ஆட களமிறங்கியது.

இந்திய அணியின் வீரர்கள் முதலில் நன்றாக ஆட்டத்தினைத் தொடங்கினாலும், பின்னால் வந்த வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினர். இந்திய அணி 63 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 242 ரன்களை மட்டுமே எடுத்தது. பிரித்வி ஷா 54(64), மயங்க் அகர்வால் 7(11), சத்தீஸ்வர் புஜாரா 54(110), விராட் கோலி 3(15), அஜிங்கியா ரஹானே 7(27), ஹனுமா விஹாரி 55(70), ரிஷாப் பண்ட் 12(14), ரவீந்திர ஜடேஜா 9(10), உமேஷ் யாதவ் 0(4), மொஹமத் சமி 16(12), ஜஸ்ப்ரீத் பூம்ரா 10(11) ரன்களை எடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் சார்பில், கெயில் ஜாமிசன் ஐந்து விக்கெட்டுகளையும், சௌத்தீ மற்றும் போல்ட் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், வாக்னர் ஒரு விக்கெட்டும் எடுத்தனர். பின்னர், தன்னுடைய முதல் இன்னிங்சை விளையாட நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி, 73.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 235 ரன்களை எடுத்தது.

நியூசிலாந்து அணியின் வீரர்கள் லாதம் 52(112), ப்ளண்டல் 30(77), வில்லியம்சன் 3(8), டெய்லர் 15(37), நிக்கோலஸ் 14(27), வாட்லிங் 0(16), கிராண்ட்ஹோம் 26(44), சௌத்தீ 0(2), ஜேமிசன் 49 (63), வாக்னர் 21(41), போல்ட் 1(2) ரன்கள் எடுத்தனர்.

இந்திய அணியின் சார்பில், மொஹமத் சமி நான்கு விக்கெட்டுகளையும், பூம்ரா மூன்று விக்கெட்டுகளையும், ரவீந்திர ஜடேஜா இரண்டு விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர், இந்திய அணி தன்னுடைய இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கியது.

இந்திய அணி ஆட்டம் தொடங்கி, 46 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் எடுத்தது. பிரித்வி ஷா 14(24), மயங்க் அகர்வால் 3(6), சத்தீஸ்வர் புஜாரா 24(88), விராட் கோலி 14(30), அஜிங்கியா ரஹானே 9(43), உமேஷ் யாதவ் 1(12), ஹனுமா விஹாரி 9(18), ரிஷாப் பண்ட் 4(14), ரவீந்திர ஜடேஜா 16(22), மொஹமத் சமி 5(11), ஜஸ்ப்ரீத் பூம்ரா 4(8) ரன்கள் எடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் சார்பில், போல்ட் நான்கு விக்கெட்டுகளையும், சௌத்தீ மூன்று விக்கெட்டுகளையும், கிராண்ட்ஹோம் மற்றும் வாக்னர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 131 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

டாம் லாதாம் 52(74), டாம் ப்ளண்டல் 55(113), வில்லியம்சன் 5(8), டெய்லர் 5(9), நிக்கோல்ஸ் 5(13) ரன்கள் எடுத்தனர். நியூசிலாந்து அணி 36 ஓவரில், மூன்று விக்கெட்டுகளை இழந்து 132 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. பூம்ரா இரண்டு விக்கெட்டுகளையும், யாதவ் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த ஆட்டத்தில், ஏழு விக்கெட்டில் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தது. கெயில் ஜேமிசன் ஆட்டநாயகன் விருதினையும், டிம் சௌத்தீ தொடர் நாயகன் விருதினையும் வென்றனர்.

HOT NEWS