இந்தியா தோல்வி! வெறியாட்டம் ஆடிய வெஸ்ட் இண்டீஸ்!

16 December 2019 விளையாட்டு
hetmyer.jpg

நேற்று நடைபெற்ற ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணியினை, வெ.இண்டீஸ் அணி வீழ்த்தியது.

சென்னை எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற வெ.இண்டீஸ் அணி பந்து வீச்சினைத் தேர்வு செய்தது. இதனையடுத்து, இந்திய அணி வீரர்கள் பேட்டிங் செய்ய களமிறங்கினர்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு 287 ரன்கள் குவித்தது. இந்திய அணி வீரர்கள் ரோகித் ஷர்மா 36(56), லோகேஷ் ராகுல் 6(15), விராட் கோலி 4(4), ஸ்ரேயஸ் ஐயர் 70(88), ரிஷாப் பண்ட் 71(69), கேதர் ஜாதவ் 40(35), ராவீந்திர ஜடேஜா 21(21), சிவாம் டூபே 9(6), மொஹமத்து சமி 0(1) ரன்கள் எடுத்தனர்.

வெ.இண்டீஸ் அணியின் சார்பில், கீமோ பால், காட்ரல், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளும், பொலார்ட் ஒரு விக்கெட்டும் எடுத்து வீழ்த்தினர்.

288 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெ.இண்டீஸ் அணி களமிறங்கியது. அந்த அணியின் வீரர்கள் சாய் ஹோப் 102(151), சுனில் அம்பரீஸ் 9(8), சிம்ரோன் ஹெட்மையர் 139(106) மற்றும் நிக்கோலஸ் பூரான் 29(23) ரன்கள் சேர்த்தனர். 47.5 ஓவரில், வெறும் இரண்டு விக்கெட்டுகளை இழந்து, 291 ரன்கள் சேர்த்து, வெ.இண்டீஸ் அணி வெற்றி பெற்றது.

இந்திய பந்து வீச்சாளர்கள் தீபக் சாஹர் மற்றும் மொஹம்மது சமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

HOT NEWS