உலகக் கோப்பை தகுதி சுற்றில் தோல்வி! வெளியேறியது இந்திய கால்பந்து அணி!

20 November 2019 விளையாட்டு
indiavsoman.jpg

2022ம் ஆண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது, கத்தார் நாட்டில் நடைபெற உள்ளது. அங்கு அதற்கானப் பணிகள், முழு வீச்சில் தயாராகி வருகின்றன. மைதானங்களை அமைக்கும் பணி முதல், வாகனப் போக்குவரத்து வரை அனைத்தும் சீரமைக்கப்பட்டு வருகின்றது.

அங்கு நடைபெறும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் விளையாடுவதற்கு, தகுதிப் போட்டிகள் தற்பொழுது மஸ்கட்டில் நடைபெற்று வருகின்றன. நேற்று இரவு 8.40 மணிக்கு நடைபெற்ற தகுதிச் சுற்றுப் போட்டியில், இந்தியாவும் ஓமன் அணியும் மோதின.

பரபரப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஓமன் அணி திறமையாக விளையாடி 33வது நிமிடத்தில் கோல் அடித்தது. அந்த அணியின் மொஹ்சின் அல் ஹசானி, 33வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனால், ஓமன் அணி 0-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதற்குப் பதிலடி கொடுப்பதற்காக, இந்திய வீரர்கள் கடுமையாகப் போராடினர். இருப்பினும், நம் அணி வீரர்களால் பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை.

கடைசியில் இந்திய அணி, ஓமன் அணியிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வியைத் தழுவியது. முதல் சுற்றிலேயே இந்திய அணியினை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. தற்பொழுது ஐந்து அணிகள் கொண்ட பட்டியலில், இந்திய அணி நான்காம் இடத்தில் தொடர்ந்து உள்ளது. ஐந்துப் போட்டிகளில் விளையாடி, வெறும் மூன்று புள்ளிகளையேப் பெற்றுள்ளது.

குரூப் ஈ அணியில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளான, கத்தார் 13 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், 12 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. தொடர்ந்து தோல்விகளைத் தழுவியதால், உலகக் கோப்பைப் போட்டிகளுக்குத் தகுதி பெறும் வாய்ப்பினை இந்திய கால்பந்து அணி இழந்தது.

HOT NEWS