கொரோனா தடுப்பு மருந்தினை இந்தியா முதலில் தயாரிக்கும் வாய்ப்பு! ஆய்வில் தகவல்!

03 November 2020 அரசியல்
coronaplasma.jpg

உலகளவில் கொரோனா வைரஸிற்கு முதன் முதலாக, தடுப்பு மருந்தினை இந்தியா கண்டுபிடிக்கும் வாய்ப்பு இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் அமைந்துள்ள ஊஹான் பகுதியில் இருந்து, உலகம் முழுக்க கொரோனா வைரஸானது வேகமாகப் பரவ ஆரம்பித்தது. அப்பொழுது தொடங்கி தற்பொழுது வரை, இந்த வைரஸானது தொடர்ந்து பரவிய வண்ணம் உள்ளது. தற்பொழுது வரை உலகம் முழுவதும் நான்கு கோடியே 68 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதில் 3 கோடியே 13 லட்சம் பேர் இந்த பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளனர்.

12 லட்சத்து 10 ஆயிரம் பேர் இந்த வைரஸால் மரணமடைந்து உள்ளனர். இதற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், ஜெர்மனி, இஸ்ரேல், அமெரிக்கா, சீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இதில், ரஷ்யா ஏற்கனவே ஸ்புட்னிக் வி என்ற மருந்தினை தயாரித்து உள்ளதாக அறிவித்தும் உள்ளது. அத்துடன், அந்நாட்டு மக்களுக்கும் வழங்கி வருகின்றது.

இந்த சூழலில், தற்பொழுது இந்த மருந்தினை எந்த நாடு முதலில் உருவாக்கும் என்ற சிறிய ஆய்வு ஒன்றும் நடைபெற்று உள்ளது. அதில், இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் நிறுவனம் தயாரித்த மருந்தானது, மூன்றாவது கட்ட ஆய்வில் இருந்தாலும், அதனால் பக்க விளைவுகள் ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அமெரிக்காவின் ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனமும் தற்பொழுது மருந்தினைப் பரிசோதனை செய்து வருகின்றன.

இவைகளுடன் இந்தியாவின் கோவாக்ஸின் மருந்தானது, 3வது கட்ட சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது. இந்த மருந்தானது ஜனவரிக்குள் சோதிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று கூறப்படுகின்றது. அதே போல் மருந்து உற்பத்தியினைப் பொறுத்தமட்டில், இந்தியாவின் கையே ஓங்கி உள்ளது. இந்தியாவில் மருந்து தயாரிப்பதற்கு 60 கோடி டோஸிற்கான ஆர்டர்கள், முன்னதாகவே குவிந்துள்ளன. இதனை விட அமெரிக்காவோ 81 கோடி டோஸிற்கான ஆர்டரை முன் கூட்டியே இந்தியாவிற்கு வழங்கி உள்ளது.

இதில் வேடிக்கை என்னவென்றால், 160 கோடி டோஸ்களுக்கு பேசிய அமெரிக்கா, தற்பொழுது 81 கோடியினை ஆர்டர் வழங்கி உள்ளது. இந்தியாவில் மட்டும் சுமார், 380 கோடி டோஸிற்கும் அதிகமான ஆர்டர்கள் கிடைத்துள்ளன. இது உலகளவில் மிகப் பெரிய அளவாகும். உலக மக்கள் தொகையின் எண்ணிக்கையானது 800 கோடி இருக்கும் எனத் தோராயமாக கணக்கிடப்படுகின்றது. அதனடிப்படையில் பார்த்தால், இந்த மருந்துகளின் ஆர்டரானது, உலகின் பாதி மக்கள் தொகையினை உள்ளடக்கி உள்ளது.

உலகின் வல்லரசு நாடுகள் பலவும் இந்தியாவினை நோக்கி உள்ளதால், சீனா தற்பொழுது உள்ள சூழ்நிலையில், இந்தியாவிடம் வாலாட்டினால் கொரோனா மருந்திற்காகவே இந்தியாவிற்கு பல நாடுகள் ஆதரவு வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

HOT NEWS