இந்தியா வெற்றி! வெ.இண்டீஸை வீழ்த்தியது!

07 December 2019 விளையாட்டு
indvswit20.jpg

மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணி அபார வெற்றிப் பெற்றது. நேற்று மாலை, ஹைதராபாத் நகரில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சினைத் தேர்வு செய்தது.

மேற்கு இந்தியத் தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில், 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் லெண்டில் சிம்மன்ஸ் 2(4), எவின் லீவிஸ் 40(17), பிராண்டன் கிங் 31(23),சிம்ரோன் ஹெட்மெயர் 56(41), கிரோன் பொலார்ட் 37(19), ஜேஸன் ஹோல்டர் 24(9), ராம்டின் 11(7) ரன்கள் குவித்தனர்.

இந்திய அணியின் சார்பில், சாஹல் 2 விக்கெட்டுகளையும், சுந்தர், சாஹர், ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 8(10) ரன்களில் ஆட்டமிழந்தார். லோகேஷ் ராகுல் 62(40), ரிஷாப் பண்ட் 18(9), ஸ்ரேயஸ் ஐயர் 4(6) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் கேப்டன் கோலி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 50 பந்துகளில், 6 பவுண்டரி மற்றும் ஆறு சிக்சர் உட்பட, 94 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தப் போட்டியில், தன்னுடைய 23 டி20 அரை சதத்தினை விளாசி அசத்தினார்.

இந்திய அணி, 18.4 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் காரி ப்ர்ரே 2 விக்கெட்டுகளையும், பொலார்ட் மற்றும் செல்டன் கார்ட்டெர்ல் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

HOT NEWS