இந்திய அணி வெற்றி! தென் ஆப்பிரிக்கா படு தோல்வி!

06 October 2019 விளையாட்டு
indiavssa.jpg

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இதனை தற்பொழுது இந்திய அணியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

அக்டோபர் 2ம் தேதி ஆரம்பித்த இந்த முதல் டெஸ்ட் போட்டியின், ஐந்தாவது நாளான இன்று வெற்றிப் பெற்றேத் தீர வேண்டியக் கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது. இன்று விட்டால், மேட்ச் டிரா ஆகிவிடும். மேலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலிலும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.

விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜசேகர ரெட்டி மைதானத்தில், இப்போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்தது. 136 ஓவரில், 7 விக்கெட் இழப்புக்கு 502 ரன்கள் எடுத்தது. மயங்க் அகர்வால் 215 ரன்களும், ரோகித் ஷர்மா 176 ரன்களும் குவித்தது. ரவீந்திரநாத் ஜடேஜா 30, சாஹா 21, விராட் கோலி 20 ரன்களும் குவித்தனர். தென் ஆப்பிரிக்கா சார்பில், மகாராஜ் 3 விக்கெட்டுகளும், பில்லாண்டர், பீட், முத்துசாமி மற்றும் எல்கர் ஆகியோர் தலா, ஒரு விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

பின்னர், தன்னுடைய முதல் இன்னிங்சை ஆட ஆரம்பித்த தென் ஆப்பிரிக்க அணி 131.2 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் 431 ரன்களை எடுத்தது. அந்த அணியின் எல்கர் 160, டீ காக் 111, பிளசிஸ் 55, முத்துசாமி 33, பவுமா 18 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வின் 7 விக்கெட்டுகளையும், ஜடேஜா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர். இஷாந்த் ஷர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி, 67 ஓவரில், 4 விக்கெட் இழப்புக்கு, 323 ரன்கள் குவித்தது. ரோகித் ஷர்மா 121 ரன்களும், புஜரா 81, ஜடேஜா 40, விராட் கோலி 31 மற்றும் ரஹானே 27 ரன்கள் எடுத்தனர். இதனையொட்டி, தன்னுடைய இன்னிங்சை டிக்ளேர் செய்தது இந்திய அணி.

393 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. இன்று ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், கண்டிப்பாக தென் ஆப்பிரிக்கா அணி வெல்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால், அவர்கள் நிலையாக நின்று ஆடினால், கண்டிப்பாக டிரா ஆகும் வாய்ப்புகள் இருந்தன. இருப்பினும், இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி, தென் ஆப்பிரிக்க அணியினை வீழ்த்தினர்.

அந்த அணியின் பீட் 56, முத்துசாமி 49, மார்க்ரம் 39 ரன்கள் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் சார்பில், ஷமி 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 4 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதனால், இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடர்ந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில், முதலிடத்தில் இருந்து வருகின்றது.

HOT NEWS