நியூசிலாந்திற்கு எதிரான கடைசி டி20 போட்டியில், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுக் கோப்பையைக் கைப்பற்றியது.
நியூசிலாந்து நாட்டிற்கு, இந்திய கிரிக்கெட் அணியானது சுற்றுப் பயணம் சென்றுள்ளது. அங்கு நடைபெற்ற நான்கு டி20 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றிப் பெற்று ஏற்கனவேத் தொடரைக் கைப்பற்றி இருந்தது. இதனால், கடைசி டி20 போட்டியில், வென்று 5-0 என்ற கணக்கில், வொயிட் வாஸ் செய்ய இந்தியா முயற்சித்தது. இன்று மதியம் 12 மணியளவில் 5வது போட்டி ஆரம்பித்தது.
மவுண்ட் மவுண்குனாய்யில் அமைந்துள்ள பே ஓவல் விளையாட்டு மைதானத்தில், இப்போட்டி நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கினைத் தேர்வு செய்தது. இந்திய அணி 20 ஓவரில், 3 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் வீரர்கள் லோகேஷ் ராகுல் 45(33), சஞ்சூ சாம்சன் 2(5), ரோகித் சர்மா 60(41), ஷ்ரேயஸ் ஐயர் 33(31), சிவாம் டூபே 5(6), மணீஷ் பாண்டே 11(4) ரன்கள் குவித்தனர்.
நியூசிலாந்து அணியின் சார்பில், ஸ்காட் இரண்டு விக்கெட்டுகளையும், பென்னட் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர். 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், நியூசிலாந்து அணி களமிறங்கியது. அந்த அணி 20 ஓவரில், 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் வீரர்கள் குப்தில் 2(6), முன்ரோ 15(6), டிம் சீபெர்ட் 50(30), டாம் ப்ரூஸ் 0(3), டெய்லர் 53(47), மிட்சல் 6(7), ஸ்காட் 0(1), டிம் சவுத்தீ 6(5), சோதி 16(10) மற்றும் பெண்ணட் 1(2) ரன்கள் குவித்தனர்.
இதனால், இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இந்திய அணியின் வீரர்கள் ஜஸ்ப்ரீத் பூம்ரா 3 விக்கெட்டுகளையும், சைனீ மற்றும் தாக்கூர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதால், 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணியினை, வொயிட் வாஸ் செய்தது இந்திய அணி.
இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருதினை பூம்ராவும், தொடர் நாயகன் விருதினை கேஎல் ராகுலும் பெற்றனர்.