இந்தியா வெற்றி! அதிர்ஷ்டம், அட்டகாசமான பந்துவீச்சால் நியூசிலாந்தை வீழ்த்தியது!

26 January 2020 விளையாட்டு
indvsnz2ndt20.jpg

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நியூசிலாந்திற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ள இந்திய அணியானது, தற்பொழுது டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. இதில், முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து, இரண்டாவது போட்டியானது நேற்று ஆக்லான்ட், ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கினைத் தேர்வு செய்தது.

அந்த அணி 20 ஓவர் முடிவில், 5 விக்கெட் இழப்பிற்கு 132 ரன்கள் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் மார்டின் குப்தில் 33 (20), கோலின் முன்ரோ 26 (25), கேன் வில்லியம்சன் 14 (20), கிராண்ட்ஹோம் 3 (5), ரோஸ் டெய்லர் 18 (24), டிம் சீப்பெர்ட் 33 (26) ரன்களை குவித்தனர். இந்திய அணியின் சார்பில், ஜடேஜா இண்டு விக்கெட்டுகளையும், டூபே, பூம்ரா மற்றும் தாக்கூர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தி அசத்தினர்.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி களமிறங்கியது. ரோகித் ஷர்மா 8 (6), கேஎல் ராகுல் 57 (50), விராட் கோலி 11 (12), ஷ்ரேயஸ் ஐயர் 44 (33) மற்றும் சிவாம் டூபே 8 (4) ரன்களை எடுத்து 17.3 ஓவரில், வெறும் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எளிதாக வெற்றிப் பெற்றனர்.

நியூசிலாந்து அணியின் சார்பில், டிம் சௌத்தீ இரண்டு விக்கெட்டுகளையும், சோதி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இந்தப் போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால், நியூசிலாந்து அணியானது பெரிய அளவில் ரன் அடிக்க இயலவில்லை. அதே சமயம், இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை மயிரிழையில் நியூசிலாந்து வீரர்கள் தவறவிட்டதால், இந்திய அணி எளிதாக வெற்றிப் பெற்றது. தற்பொழுது 2-0 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

HOT NEWS