மீண்டும் சூப்பர் ஓவர்! இந்திய அணி அதிரடி வெற்றி! 4-0 என முன்னிலை!

31 January 2020 விளையாட்டு
indiabeatnewzealand.jpg

இந்தியாவிற்கும் நியூசிலாந்திற்கும் இடையில் நான்காவது டி20 போட்டியானது, வெல்லிங்டனில் உள்ள ஸ்கை ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சினைத் தேர்வு செய்தது.

முதலில் இறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் வீரர்கள் லோகேஷ் ராகுல் 39 (26), சஞ்சூ சாம்சன் 8(5), விராட் கோலி 11(9), ஷ்ரேயஷ் ஐயர் 1(7), சிவாம் டூபே 12(9), மணீஸ் பாண்டே 50(26), வாஷிங்டண் சுந்தர் 0(3), ஷ்ரதூல் தாக்கூர் 20(15), சாஹல் 1(2), நவ்தீப் சைனி 11(9) ரன்கள் குவித்தனர். நியூசிலாந்து அணி சார்பில், சோதி மூன்று விக்கெட்டுகளையும், பெண்ணட் 2 விக்கெட்டுகளையும், சாண்ட்னர், சௌத்தீ மற்றும் ஸ்காட் ஆகியோர் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பின்னர் 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், நியூசிலாந்து அணி களமிறங்கியது. கப்தில் 4(8), முன்ரோ 64(47), டிம் சிப்பெட் 57(39), டாம் ப்ரூஸ் 0(3), ரோஷ் டெய்லர் 24(18), டேரி மிச்சல் 4(3), சாண்ட்னர் 2(2) மற்றும் ஸ்காட் 0(0) ரன்களை எடுத்தனர். 20 ஓவர் முடிவில், நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை குவித்தது. இந்திய அணியின் சார்பில், தாக்கூர் 2 விக்கெட்டுகளையும், பூம்ரா மற்றும் சாஹல் ஆகியோர், ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனால், சூப்பர் ஓவர் முறை இந்த ஆட்டத்திலும் அமல்படுத்தப்பட்டது. இது, இந்த தொடரில் அமல்படுத்தப்படுவது இரண்டாவது முறையாகும். இதற்கு முன், நடந்த மூன்றாவது டி20 போட்டியிலும் சூப்பர் ஓவர் முறை அமல்படுத்தப்பட்டது.

நியூசிலாந்து அணி, சூப்பர் ஓவரில் 13 ரன்களை குவித்தது. நியூசிலாந்து அணி ஒரு விக்கெட்டினை மட்டும் இழந்தது. பூம்ரா சூப்பர் ஓவரில், இந்தியாவின் சார்பில் பந்து வீசி அசத்தினார். 14 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், இந்திய அணி களமிறங்கியது.

இந்திய அணியின் சார்பில், லோகேஷ் ராகுல் மற்றும் கோலி களமிறங்கினர். முதல் இரண்டு பந்துகளில் சிக்சர் மற்றும் பவுண்டரி அடித்து, ராகுல் கலக்கினார். பின்னர், சௌத்தீ பந்தில் ராகுல் அவுட்டாக, சஞ்சூ சாம்சன் களமிறங்கினார். விராட் கோலி கடைசியாக ஒரு பவுண்டரி அடித்து, இந்திய அணியினை வெற்றிப் பெற செய்தார்.

இந்த போட்டியுடன் சேர்த்து இந்திய அணி, 4-0 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.

HOT NEWS