இந்தியா வெற்றி! தொடரைக் கைப்பற்றியது!

11 November 2019 விளையாட்டு
indvsbant20.jpg

இந்தியா வங்கதேசத்திற்கு இடையில் நடைபெற்ற, மூன்றாவது டி20 போட்டியில், இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரினைக் கைப்பற்றியது.

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள, வங்கதேச கிரிக்கெட் அணியானது, மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது.

இதில் நேற்று, மூன்றாவது டி20 போட்டியானது, நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணியானது முதலில் பந்துவீச்சினைத் தேர்வு செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் இந்திய அணியானது, 5 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் ரோகித் ஷர்மா 2(6), சிகர் தவான் 19(16), லோகேஷ் ராகுல் 52(35), ஷ்ரேயஸ் ஐயர் 62(33), ரிஷப் பண்ட் 6(9), மணீஸ் பாண்டே 22(13) மற்றும் சிவம் டூபே 9(8) ரன்கள் சேர்த்தனர்.

வங்கதேச அணியின் சார்பில், சகிபுல் இஸ்லாம் மற்றும் சௌம்யா சர்கார் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும், அல் அமீன் ஹோசைன் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், வங்கதேச அணி களமிறங்கியது. அந்த அணியின் ஆட்டக்காரர்கள் லிட்டன் தாஸ் 9(8), மொஹமத் நய்ம் 81(48), சௌம்யா சர்கார் 0(1), மொஹமத் மிதுன் 27(29), முஸ்பிஹூர் ரஹீம் 0(1), மஹ்மதுல்லா 8(10), அபிப் ஹோசைன் 0(1), அமினுல் இஸ்லாம் 9(9), ஷகிபுல் இஸ்லாம் 4(6), முஸ்தபிஜூர் ரஹ்மான் 1(3), அல் அமீன் ஹோசன் 0(0) ரன்கள் எடுத்தனர். வங்கதேச அணி, 19.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 144 ரன்கள் எடுத்துத் தோல்வி அடைந்தது.

இந்திய அணியின் பந்துவீச்சாளர்கள் முதலில் சொதப்பினாலும், பின்னர் தெளிவாக பந்துவீசி வங்கதேசத்தினை சுருட்டினர். தீபக் சாஹர் 6 விக்கெட்டுகளையும், ஷிவம் டூபே 3 விக்கெட்டுகளையும், சாஹல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரினை வென்று, கோப்பையைக் கைப்பற்றியது.

HOT NEWS