இந்தியா வெற்றி! வரலாறு படைத்த இந்தியா!

13 October 2019 விளையாட்டு
indvssa2nd.jpg

pic credit:twitter.com/@csk

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது, டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அக்டோபர் 10ம் தேதி புனேயில் உள்ள, மஹாராஷ்ட்டிரா கிரிக்கெட் மைதானத்தில், இந்தப் போட்டி ஆரம்பித்தது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இந்திய அணி, தன்னுடைய முதல் இன்னிங்சில் 156.3 ஓவரில், வெறும் 5 விக்கெட்டுகளை இழந்து, 601 ரன்களை குவித்தது. இந்திய அணியின் மயங்க் அகர்வால் 108 ரன்களும், ரோகித் ஷர்மா 14 ரன்களும், புஜரா 58, அஜிங்கியா ரஹானே 59, ரவீந்திரா ஜடேஜா 91 ரன்களும் குவித்து அசத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி 336 பந்துகளில், 33 பவுண்டரி, 2 சிக்சர் என விளாசினார். மொத்தம் 254 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்து அசத்தினார். 601 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்தது.

தென் ஆப்பிரிக்கா அணியின் சார்பில், ராபாடா 3 விக்கெட்டுகளையும், மகாராஜ் மற்றும் முத்துசாமி ஆகியோர் தலா, ஒரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதனை அடுத்து, இமாலய ரன்னினை சேஸ் செய்ய தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணி 105.4 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 275 ரன்களைக் குவித்தது. அதிகபட்சமாக மகாராஜ் 72, கேப்டன் டூ பிளசிஸ் 64, பில்லான்டர் 44, டீ காக் 31, பூரூயன் 30 ரன்களையும் எடுத்தனர். இந்திய பந்துவீச்சாளர்கள் அஸ்வின் 4 விக்கெட்டுகளையும், யாதவ் 3 விக்கெட்டுகளையும், ஷமி 2 விக்கெட்டுகளையும், ஜடேஜா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

பளோ ஆன் ஆன நிலையில், தன்னுடைய இரண்டாவது இன்னிங்சினை தென் ஆப்பிரிக்கா அணி ஆட தொடங்கியது. இருப்பினும், தொடர்ந்து, தென் ஆப்பிரிக்கா வீரர்கள் சொதப்பலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியதால், அந்த அணி இரண்டாவது இன்னிங்சிலும், 67.2 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, வெறும் 189 ரன்களை மட்டுமே எடுத்துத் தோல்வி அடைந்தது.

அந்த அணியின் எல்கர் 48, பவுமா 38, பில்லான்டர் 37, மகாராஜ் 22 ரன்கள் குவித்தனர். இரண்டாவது இன்னிங்சில், இந்திய பந்து வீச்சாளர்கள் ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் தலா மூன்று விக்கெட்டுகளையும், அஸ்வின் 2 விக்கெட்டுகளையும், மொகம்மத் ஷமி ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும், இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியினை வீழ்த்தி, தொடரினைக் கைப்பற்றியது.

HOT NEWS