நடிகர் விஜய்க்கு சம்மன்! நேரில் ஆஜராக உத்தரவு!

10 February 2020 சினிமா
vijaysarkar.jpg

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் வந்து, உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என, நடிகர் விஜய்க்கு சம்மன் அனுப்பி உள்ளது வருமான வரித்துறை.

கடந்த வாரம், மூன்று நாட்களாக, பைனான்சியர் அன்புச்செழியன், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் நடிகர் விஜய்க்கு சொந்தமான இடங்களில், வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். பிகில் படத்தின் வசூலில் முறைகேடு செய்திருப்பதாகவும், விஜய்க்கு வழங்கப்பட்ட சம்பளத்தில் முறைகேடு நடைபெற்று இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த சோதனை நடைபெற்று உள்ளது.

மொத்தம், 38 இடங்களில், இந்த சோதனை நடத்தப்பட்டது. அதில், நெய்வேலியில் சூட்டிங்கில் இருந்த, நடிகர் விஜயிடம் நேரடி விசாரணையும் நடைபெற்றது. பின்னர், அவரை வீட்டிற்கு அழைத்து வந்து இரண்டாவது நாளாக விசாரணை செய்தனர். இதில், பைனான்சியர் அன்புச்செழியன் வீட்டில் இருந்து, 77 கோடி ரூபாய் ரொக்கப் பணத்தினை பறிமுதல் செய்தனர். பின்னர், பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.

இந்நிலையில், தற்பொழுது நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம் மற்றும் பைனான்சியர் அன்புச்செழியன் ஆகியோருக்கு நேரில் ஆஜராகி உத்தரவிட்டு, வருமான வரித்துறையானது, சம்மன் அனுப்பியுள்ளது. அதன் படி வருகின்ற புதன் கிழமைக்குள், ஆஜராக வேண்டும் என, கூறப்பட்டும் உள்ளது.

HOT NEWS