இளையராஜாவிற்கு ஹரிவராசனம் விருது! கேரள அரசு கௌரவம் செய்தது!

16 January 2020 சினிமா
ilayarajaharivarasamaward.jpg

கேரள அரசின் உயரிய விருதான, ஹரிவராசனம் விருதானது, இசைஞானி இளையராஜாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், மத நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு, ஆண்டு தோறும் ஹரிவராசனம் விருது வழங்கப்படுகின்றது. இந்த விருதுடன் கேடயமும், ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் வழங்கப்படுகின்றது.

ஏற்கனவே, பி சுசிலா, கே ஜே யேசுதாஸ் மற்றும் எஸ்பி பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் இந்த விருதினை பெற்றுள்ளனர். இந்நிலையில், தற்பொழுது இசைஞானி இளையராஜாவிற்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன், ஒரு லட்ச ரூபாய் பணமும், கேடயமும் மற்றும் சான்றிதழ் உள்ளிட்டவைளும் தரப்பட்டன.

பின்னர், நிர்வாகிகளுடன் சபரி மலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற இளையராஜா, ஐயப்பனை தரிசனம் செய்தார். அவருக்கு, வணக்கத்திற்குரிய இசைஞானி என்றப் பட்டமும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.

HOT NEWS